நிர்மலாதேவி வழக்கு: பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி விருதுநகர் கோர்ட்டில் ஆஜர்
பேராசிரியை நிர்மலாதேவி வழக்கில் பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகியோர் விருதுநகர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
விருதுநகர்,
அருப்புக்கோட்டை கல்லூரி மாணவிகளை பேராசிரியை நிர்மலாதேவி தவறான பாதைக்கு அழைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை ஜெயிலில் அடைக்கப்பட்டு இருக்கும் பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகியோர் நேற்று விருதுநகர் முதல் வகுப்பு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
மாஜிஸ்திரேட்டு மும்தாஜ், அவர்கள் இருவருக்கும் வருகிற 28–ந்தேதி வரை காவலை நீட்டித்து உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து போலீசார் அவர்கள் இருவரையும் வேனில் ஏற்றி மதுரை மத்திய சிறையில் அடைக்க கொண்டு சென்றனர்.
இதற்கு முன்பு கோர்ட்டில் ஆஜராக வந்த முருகன், கருப்பசாமி ஆகிய இருவரும் முகத்தை மறைத்துக்கொண்டு வந்த நிலையில், நேற்று அவர்கள் இருவரும் கோர்ட்டுக்கு கொண்டுவரப்பட்ட போதும், கோர்ட்டில் இருந்து வெளியே அழைத்து வந்த போதும் சகஜமாக நடந்து வந்து வேனில் ஏறிச்சென்றனர்.
Related Tags :
Next Story