நிதி நிறுவனத்தில் அதிகாரி பணிகள்


நிதி நிறுவனத்தில் அதிகாரி பணிகள்
x
தினத்தந்தி 15 May 2018 11:45 AM IST (Updated: 15 May 2018 11:45 AM IST)
t-max-icont-min-icon

பிரபல வங்கியின் துணை நிதி நிறுவனத்தில் இளநிலை அதிகாரி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

பொதுத்துறை வங்கிகளில் ஒன்று கனரா வங்கி. அதன் துணை நிதி நிறுவனம் ‘கேன்பின் ஹோம்ஸ் லிமிடெட்’ என்பதாகும். தற்போது இந்த நிறுவனத்தில் இளநிலை அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 125 பேர் தேர்வு செய்யப் படுகிறார்கள். இதில் தமிழகத்திற்கு 17 இடங்கள் உள்ளன. கர்நாடகா, ஆந்திரா, சத்தீஸ்கர், குஜராத், அரியானா, ஜார்க்கண்ட், கேரளா, மத்தியபிரதேசம், மகாராஷ்டிரா, புதுச்சேரி, பஞ்சாப், தெலுங்கானா, உத்தரகாண்ட் போன்ற மாநிலங்களிலும் கணிசமான பணியிடங்கள் உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்...

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 1-2-2018-ந் தேதியில் 21 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதி களின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.

கல்வித்தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தின் கீழ் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். கணினி அறிவுடன், ஆங்கிலம் மற்றும் பிராந்திய மொழிகளில் பேச, எழுத படிக்கத் தெரிந்திருப்பது அவசியம்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் இருப்பவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 15- 5-2018-ந் தேதி கடைசி நாளாகும்.

இது பற்றிய விரிவான விவரங்களை http://canfinhomes.com/job என்ற இணையதளத்தில் பார்க்கலாம். 

Next Story