பேசும் கணினி வருகிறது!


பேசும் கணினி வருகிறது!
x
தினத்தந்தி 15 May 2018 7:52 AM GMT (Updated: 15 May 2018 7:52 AM GMT)

கூகுள் நிறுவனம் ஏ.ஐ. அசிஸ்டன்ட் எனும் தொழில்நுட்பத்தில் புதிய செயற்கை அறிவு கணினிகளை உருவாக்கி வருகிறது.

கணினி நம்முடன் பேசவும், விவாதம் செய்யவும் வல்லது. கூகுளின் வருடாந்திர டெவலப்பர் மாநாட்டில், இந்த நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ள கூகுள் டப்லெக்ஸ் கணினியை தலைமை ெசயல் அதிகாரி சுந்தர்பிச்சை விளக்கிக் காட்டினார். அப்போது ஒரு அழகு நிலையத்திற்கு போன் செய்து சிகை அலங்காரம் செய்ய நேரம் ஒதுக்கித் தரும்படி விவாதம் நடத்தியது கணினி. உரையாடலின்போது ‘உம்’ கொட்டி கேட்பது, ‘உச்’ கொட்டி உணர்வை பிரதிபலிப்பது வரை அனைத்து உரையாடல் உத்திகளும் இந்த கணினிகளுக்கு அத்துபடி என்பது வியப்புக்குரியது.

இந்த கணினியின் குரலானது அசல் மனிதரின் குரல்போல இருப்பது குறிப்பிடத்தக்கது. எதிர்காலத்தில் இந்த கணினியில் உங்கள் குரலை பதிவு செய்து வைத்தால் இதுபோல சின்னச்சின்ன வேலைகளை அதுவாகவே செய்து வைத்துவிடும். அதாவது 1 மணிக்கு ரெஸ்டாரண்ட்க்கு போன் செய்து உங்களுக்கான உணவை ஆர்டர் கொடுத்துவிட வேண்டும் என்பதை பதிவு செய்து வைத்துவிட்டால் நீங்கள் என்ன வேலையில் இருந்தாலும் உங்களுக்கான உணவு சரியான நேரத்தில் உங்களைத் தேடி வந்துவிடும்.

மேலும் கணினியில் பல்வேறு பணிகளைச் செய்யும்போது உதவியாகவும், தவறுகளை சுட்டிக் காட்டவும் செயற்கை அறிவு கணினிகள் பயன்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பேச்சு ஆற்றல், எழுதும் ஆற்றல் குறைந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் போன்றவர்களுக்கும் செயற்கை அறிவு கணினிகள் பெரிதும் கைகொடுக்கும். செயற்கை கணினிகள் நம்மை மீறி செயல்பட்டு ஆபத்து உண்டாக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

Next Story