ஒளிரும் புற்றுநோய் செல்கள்


ஒளிரும் புற்றுநோய் செல்கள்
x
தினத்தந்தி 15 May 2018 1:36 PM IST (Updated: 15 May 2018 1:36 PM IST)
t-max-icont-min-icon

புற்றுநோய் செல்களை அடையாளம் காட்ட புதுமையான மருந்து கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

மருந்து  உட்கொள்ளும்போது புற்றுக்கட்டிகள், புற்றுசெல்கள் மட்டும் ஒளிர்ந்து அடையாளம் காட்டப்படுகிறது. மிக்சிகன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இந்த மருந்தை உருவாக்கி உள்ளனர். வழக்கமாக மாமோகிராம்ஸ் மூலம் மார்பகப் புற்றுநோய் கண்டுபிடிக்கப்படுகிறது. இதன் மூலம் நோய் கண்டறியப்பட்டாலும் எத்தகைய புற்றுக்கட்டிகள் ஆபத்தானவை, சிகிச்சைக்குரிய புற்றுசெல்கள் எவை என்பதை இந்த பரிசோதனை காட்டிக் கொடுப்பதில்லை. இது புற்றுநோய் சிகிச்சைக்கு அவசியமான ஒன்றாகும். இதற்காக ஆய்வாளர்கள் ஒருவகை புரதங்களால் ஆன மருந்தை உருவாக்கி உள்ளனர். வாய்வழியாக உட்கொள்ளக்கூடிய இந்த மருந்தானது புற்றுசெல்களை அடையாளம் காண துணை செய்கிறது. இதை உட்கொண்ட பின்னர், அகச்சிவப்பு கதிர் மூலம் உடலை ஸ்கேன் செய்யும்போது புற்றுநோய் செல்கள் ஒளிர்ந்து தனியே அடையாளம் காணப்படுகின்றன. எலிகள் மீது நடந்த பரிசோதனையில் இது வெற்றிகரமாக செயல்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக மனிதர்கள் மீதான பரிசோதனைக்கு தயாராகி வருகிறது இந்த புதிய புற்றுநோய் மருந்து. 

Next Story