பாக்கெட் கணினி
ஸ்மார்ட்போன்கள் இன்று சிறிய கணினி போலத்தான் பயன்படுத்தப்படுகிறது. இருந்தாலும் கணினி போன்ற மனநிறைவை அவை தந்துவிடுவதில்லை.
டேப்லட்கள் சிறிய கணினி என்று கருதப்பட்டாலும் அவையும் கணினிபோல பயன்பாட்டில் பெருகவில்லை. திருப்தி தரவில்லை. இந்த குறைகளை போக்கி, அசல் கணினியின் சிறப்புகளுடன் கையடக்க கணினியாக தயாராகி உள்ளது ‘மை பிசி’ எனப்படும் பாக்கெட் கணினி. இதை செல்போன்கள் போல சட்டைப் பையில் அடக்கிவிடலாம். இது 13.5 செ.மீ நீளமும், 9 செ.மீ. அகலமும் கொண்டது. 1.6 செ.மீ தடிமன் உடையது. விண்டோஸ் 10 அல்லது ஆண்ட்ராய்டு 5.1 இயங்குதளத்தில் செயல்படக் கூடியது. கணினிபோல அதிகமான சேமிப்புத்திறன், நினைவகத்திறன் கொண்டது. இதில் 8 ஜி.பி. ராம் நினைவகம் உள்ளது குறிப்பிடத்தக்கது. 128 ஜி.பி. சேமிப்புத்திறன் கொண்டது. 720 பிக்சல் தெளிவில் காட்சிகளைக் காட்டும். யு.எஸ்.பி. இணைப்பு மற்றும் போர்ட் இணைப்புகள் பல இருக்கிறது. 6 ஆயிரம் மில்லி ஆம்பியர் பேட்டரி உள்ளது. திரையில் கீபோர்டு உண்டு. வெளியில் கீபோர்டு இணைத்து பயன்படுத்தலாம். முன்பக்கமே ஸ்பீக்கர் இணைப்பு உள்ளதால் பொழுதுபோக்கு அம்சத்திற்கும் பயன்படுத்தலாம். இன்டியகோகோ நிறுவனம் இதை விற்பனைக்கு கொண்டு வருகிறது. செப்டம்பர் முதல் அமெரிக்கா தவிர்த்த மற்ற நாடுகளிலும் விற்பனைக்கு கிடைக்கும். விலை 149 அமெரிக்க டாலர்கள். இந்திய மதிப்பில் 10 ஆயிரத்து 100 ரூபாய்.
Related Tags :
Next Story