மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் துணிகரம் ஓய்வு பெற்ற கண்டக்டர் மனைவியிடம் 7½ பவுன் தங்க சங்கிலி பறிப்பு + "||" + 7½ pound gold chain flush with a retired condemnor's wife at midnight

நள்ளிரவில் துணிகரம் ஓய்வு பெற்ற கண்டக்டர் மனைவியிடம் 7½ பவுன் தங்க சங்கிலி பறிப்பு

நள்ளிரவில் துணிகரம் ஓய்வு பெற்ற கண்டக்டர் மனைவியிடம் 7½ பவுன் தங்க சங்கிலி பறிப்பு
அருமனை அருகே நள்ளிரவில் ஜன்னல் கம்பியை வளைத்து வீடு புகுந்து ஓய்வு பெற்ற கண்டக்டர் மனைவியிடம் 7½ பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
அருமனை,

அருமனை அருகே உள்ள சூட்டூர்கோணம் பகுதியை சேர்ந்தவர் ஆல்பி (வயது60), ஓய்வு பெற்ற அரசு பஸ் கண்டக்டர். இவரது மனைவி விஜயா (53). இவர்கள் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க ஜன்னல் கம்பிகளை வளைத்து உள்ளே புகுந்தனர். பின்னர், அவர்கள் தப்பி செல்வதற்கு வசதியாக வீட்டின் கதவுகளை திறந்து தயார் நிலையில் வைத்தனர்.


பிறகு வீட்டில் அலமாரி, மேஜை போன்றவற்றில் பணம், நகை ஏதாவது இருக்கிறதா என தேடினர். அப்போது, அவர்களது கையில் எதுவும் சிக்கவில்லை.

தொடர்ந்து படுக்கை அறைக்குள் புகுந்து அங்கு தூங்கி கொண்டிருந்த விஜயாவின் கழுத்தில் கிடந்த 7½ பவுன் தங்க சங்கிலியை பறித்தனர். அப்போது, திடீரென கண்விழித்த விஜயா, ‘திருடன்... திருடன்...’ என சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு தூங்கி கொண்டிருந்த ஆல்பி எழுந்தார். உடனே, மர்ம நபர்கள் ஏற்கனவே திறந்த நிலையில் வைத்திருந்த கதவு வழியாக தப்பி சென்றுவிட்டனர்.

சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு கூடினர். அவர்கள் மர்ம நபர்களை அந்த பகுதியில் தேடினர். ஆனால்,  கண்டுபிடிக்க முடியவில்லை.

இதுகுறித்து அருமனை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிந்து இருந்த மர்ம நபர்களின் ரேகைகள் பதிவு செய்யப்பட்டன. இந்த சம்பவம் குறித்து, அருமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து நகை பறித்த மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தொடர்புடைய செய்திகள்

1. காண்டிராக்டர் மனைவியை தாக்கி 7 பவுன் சங்கிலி பறிப்பு ஹெல்மெட் அணிந்து வந்த ஆசாமி கைவரிசை
தென்தாமரைகுளம் அருகே மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம ஆசாமி காண்டிராக்டர் மனைவியை தாக்கி 7 பவுன் தங்கச்சங்கிலியை பறித்து சென்றான்.
2. மொபட்டில் சென்ற வக்கீல் மனைவியை கீழே தள்ளி 6 பவுன் தாலி சங்கிலி பறிப்பு
மொபட்டில் சென்ற வக்கீல் மனைவியை கீழே தள்ளி விட்டு 6 பவுன் தாலி சங்கிலியை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
3. அரசு ஊழியர் சங்கத்தினர் மனித சங்கிலி போராட்டம்
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் முன்பு நேற்று மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
4. போலீஸ் டி.ஐ.ஜி. அலுவலகம் அருகே நீதிமன்ற பெண் ஊழியரிடம் 6 பவுன் சங்கிலி பறிப்பு
போலீஸ் டி.ஐ.ஜி. அலுவலகம் அருகே நீதிமன்ற பெண் ஊழியரிடம் 6 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
5. தஞ்சை அருகே விவசாய சங்க நிர்வாகியை தாக்கி 7 பவுன் சங்கிலி பறிப்பு போலீஸ் விசாரணை
தஞ்சை அருகே விவசாய சங்க நிர்வாகியை தாக்கி 7 பவுன் சங்கிலியை பறித்து சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.