மனநிலை பாதிக்கப்பட்ட பெண் குழந்தை மயிலாடுதுறை சிறப்பு இல்லத்துக்கு மாற்றம்; கலெக்டர் உத்தரவு


மனநிலை பாதிக்கப்பட்ட பெண் குழந்தை மயிலாடுதுறை சிறப்பு இல்லத்துக்கு மாற்றம்; கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 16 May 2018 5:00 AM IST (Updated: 16 May 2018 3:27 AM IST)
t-max-icont-min-icon

மனநிலை பாதிக்கப்பட்ட பெண் குழந்தை மயிலாடுதுறை சிறப்பு இல்லத்துக்கு மாற்றுமாறு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

திருவண்ணாமலை,

கடந்த 3-ந் தேதி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் வளாகத்தில் ஆதரவற்ற நிலையில் சுமார் 1½ வயதான மனநிலை பாதிக்கப்பட்ட பெண் குழந்தை உள்ளதாக கலெக்டர் கே.எஸ்.கந்தசாமிக்கு தொலைபேசி மூலம் தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் மூலம் அந்த குழந்தை மீட்கப்பட்டு பராமரிக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று அந்த குழந்தைக்கு கலெக்டர், ருக்கு என்று பெயரிட்டார். பின்னர் அந்த குழந்தையை மயிலாடுதுறையில் உள்ள மனநலன் பாதித்த குழந்தைகளுக்கான சிறப்பு இல்லமான அறிவகம் குழந்தைகள் இல்லத்திற்கு மாற்றம் செய்ய உத்தரவிட்டார். அப்போது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரேணுகாதேவி உடனிருந்தார்.

Next Story