மாவட்ட செய்திகள்

கர்நாடக தேர்தலில் பா.ஜனதாவின் வெற்றியை நம்ப முடியவில்லை + "||" + BJP victory in Karnataka elections could not be believed

கர்நாடக தேர்தலில் பா.ஜனதாவின் வெற்றியை நம்ப முடியவில்லை

கர்நாடக தேர்தலில் பா.ஜனதாவின் வெற்றியை நம்ப முடியவில்லை
கர்நாடக தேர்தலில் பா.ஜனதாவின் வெற்றியை நம்ப முடியவில்லை என்று தேசியவாத காங்கிரஸ் தெரிவித்து உள்ளது.
மும்பை,

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரான ஜெயந்த் பாட்டீல் மும்பையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக மக்களிடம் எந்தவித அதிருப்தியும் காணப்படவில்லை. பா.ஜனதாவின் முதல்-மந்திரி வேட்பாளர் எடியூரப்பா மீதான ஊழல் குற்றச்சாட்டுகளால் மக்கள் மத்தியில் அவரை பற்றி நல்ல அபிமானம் இருக்கவில்லை.

இருந்தபோதிலும் பா.ஜனதா அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று முன்னிலை வகிப்பதை நம்ப முடியவில்லை. இந்த தேர்தல் முடிவுகள் முறையாக ஆராயப்பட வேண்டும்.

வாக்குப்பதிவு எந்திரங்களின் மீதான சந்தேகங்களை தவிர்க்கும் பொருட்டு மீண்டும் பழையபடி வாக்குச்சீட்டு முறையை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்ய வேண்டும். வாக்குச்சீட்டுகளால் காலதாமதம் ஏற்படலாம், ஆனால் சந்தேகங்களுக்கு முடிவு கட்டப்படும். இது குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.