மாவட்ட செய்திகள்

கர்நாடகத்தில் ஆட்சி அமைக்க எடியூரப்பாவுக்கு கூடுதல் வாய்ப்பு? + "||" + Is the additional opportunity for Eudhyarappa to rule in Karnataka?

கர்நாடகத்தில் ஆட்சி அமைக்க எடியூரப்பாவுக்கு கூடுதல் வாய்ப்பு?

கர்நாடகத்தில் ஆட்சி அமைக்க எடியூரப்பாவுக்கு கூடுதல் வாய்ப்பு?
கர்நாடக மாநிலத்தில் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க தனிப்பெரும்பான்மை பலம் பெறவில்லை.
பெங்களூரு,

தனிப்பெரும் கட்சியாக வந்து உள்ள பா.ஜனதாவின் தலைவர் எடியூரப்பாவும், காங்கிரசின் ஆதரவைப் பெற்று உள்ள ஜனதாதளம் (எஸ்) கட்சி தலைவர் குமாரசாமியும் கவர்னர் வஜூபாய் வாலாவை நேற்று சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரி உள்ளனர்.

பொதுவாக தனிப்பெரும் கட்சியாக வந்து உள்ள பா.ஜனதாவின் தலைவர் எடியூரப்பாவுக்குத்தான் ஆட்சி அமைக்க முதலில் வாய்ப்பை அளித்து, குறிப்பிட்ட நாட்களில் சட்டசபையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் வஜூபாய் வாலா வாய்ப்பு அளிப்பார். அதற்குத்தான் கூடுதல் சாத்தியம் உள்ளது.

ஆனால் கோவா, மணிப்பூர், மேகாலயா மாநிலங்களில் இப்படி நிலை வந்தபோது, தனிப்பெரும் கட்சியை அந்த மாநில கவர்னர்கள் ஆட்சி அமைக்க அழைக்காமல், நிலையான ஆட்சியை அமைப்பார்கள் என்ற எதிர்பார்ப்பில், பா.ஜனதா கூட்டணியை ஆட்சி அமைக்க அழைத்தனர்.

அதை சுட்டிக்காட்டி, 115 இடங்களைக் கொண்டு உள்ள தங்களுக்குத்தான் ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுக்க வேண்டும் என்று ஜனதாதளம் (எஸ்), காங்கிரஸ் அணி வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.