பாளையங்கோட்டையில் திறன் கண்டறியும் திட்டத்தின் கீழ் நீச்சல் வீரர்கள் தேர்வு 22–ந்தேதி நடக்கிறது
பாளையங்கோட்டையில் திறன் கண்டறியும் திட்டத்தின் கீழ் நீச்சல் வீரர்கள் தேர்வு வருகிற 22–ந்தேதி நடக்கிறது.
நெல்லை,
பாளையங்கோட்டையில் திறன் கண்டறியும் திட்டத்தின் கீழ் நீச்சல் வீரர்கள் தேர்வு வருகிற 22–ந்தேதி நடக்கிறது.
இதுகுறித்து நெல்லை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் வீரபத்ரன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–
திறன் கண்டறியும் திட்டம்தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நெல்லை பிரிவின் சார்பில், திறமையான வீரர், வீராங்கனைகளை கண்டறிவதற்கான திறன் கண்டறியும் திட்டம் என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின்படி, 10 முதல் 14 வயது வரை உள்ள மொத்தம் 20 நீச்சல் வீரர், வீராங்கனைகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
இவ்வாறு தேர்வு செய்யப்படும் வீரர், வீராங்கனைகளுக்கு வாரத்துக்கு 5 நாட்கள் வீதம் வருடத்தில் 6 மாதங்கள் சிறப்பான பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சியில் கலந்து கொள்ளும் வீரர்களுக்கு தினமும் போக்குவரத்து செலவு மற்றும் சத்தான சிற்றுண்டி வழங்கப்படுகிறது. மேலும் சீருடை, விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படுகிறது.
போட்டிகள்இந்த திட்டத்தில் சேருவதற்கான தேர்வு போட்டிகள் பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில் வருகிற 22–ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணிக்கு நடக்கிறது. இதில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் பிறப்பு சான்றிதழ் நகலுடன் வர வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0462 2572632, 9487353165 என்ற அலுவலக தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.