நாட்டேரி கிராமத்தில் டெங்கு விழிப்புணர்வு கூட்டம்
நாட்டேரி கிராமத்தில் டெங்கு விழிப்புணர்வு கூட்டம் நடைப்பெற்றது.
செய்யாறு
வெம்பாக்கம் தாலுகா நாட்டேரி ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில், நாட்டேரி கிராமத்தில் டெங்கு தின விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு டாக்டர் என்.ஈஸ்வரி தலைமை தாங்கினார். செவிலியர்கள் கலைவாணி, ஹேமலதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுகாதார ஆய்வாளர் கே.சம்பத் வரவேற்றார்.
கூட்டத்தில் டாக்டர் ஈஸ்வரி பேசுகையில், ‘டெங்கு வைரஸ் கிருமியால் ஏற்படும் காய்ச்சலாகும். இவை ஏ.டி.எஸ். கொசுக்களின் மூலமாக பரவும். டெங்கு நோய்க்கான அறிகுறியாக உடல் நடுக்கம், காய்ச்சல், மயக்கம், வாந்தி மற்றும் மூச்சிவிட சிரமம் ஏற்படுதல் உள்ளிட்டவை ஆகும். டெங்கு காய்ச்சலை தடுத்திட நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்’ என்றார்.
அதைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
Related Tags :
Next Story