பிளஸ்–2 தேர்வு முடிவு காஞ்சீபுரம் மாவட்டத்தில் 41,389 மாணவ–மாணவிகள் தேர்ச்சி கலெக்டர் தகவல்


பிளஸ்–2 தேர்வு முடிவு காஞ்சீபுரம் மாவட்டத்தில் 41,389 மாணவ–மாணவிகள் தேர்ச்சி கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 16 May 2018 10:30 PM GMT (Updated: 16 May 2018 8:05 PM GMT)

பிளஸ்–2 தேர்வு முடிவு நேற்று வெளியானது. இதில் காஞ்சீபுரம் மாவட்டத்தை சேர்ந்த 41,389 மாணவ–மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

காஞ்சீபுரம்,

தமிழகம் முழுவதும் நேற்று பிளஸ்–2 தேர்வு முடிவு வெளியானது. அதையொட்டி காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா நிருபர்களிடம் பேசும்போது கூறியதாவது:–

காஞ்சீபுரம் மாவட்டத்தில் மொத்தம் 350 பள்ளிகள் உள்ளன. அதில் மொத்தம் 111 அரசு பள்ளிகள் உள்ளன. 22,220 மாணவர்கள், 25,241 மாணவிகள் என்று மொத்தம் 47,461 மாணவ–மாணவிகள் பிளஸ்–2 தேர்வு எழுதினார்கள்.

அவர்களில் 18,362 மாணவர்கள், 23,027 மாணவிகள் என்று மொத்தம் 41,389 மாணவ–மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டத்தின் தேர்ச்சி 87.21 சதவீதம் ஆகும். முந்தைய ஆண்டு 88.85 சதவீதம் தேர்ச்சி பெற்று இருந்தது.

அரசு பள்ளி மாணவர்கள் மொத்தம் 19,171 பேர் தேர்வு எழுதினர். அவர்களில் மாணவர்கள் 66.67 சதவீதமும், மாணவிகள் 84.31 சதவீதமும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி திருவளர்செல்வி உடன் இருந்தார்.


Next Story