மாவட்ட செய்திகள்

காஞ்சீபுரம் அருகே லாரி–மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் சாவு + "||" + Truck-motorcycle clash; The young man dies

காஞ்சீபுரம் அருகே லாரி–மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் சாவு

காஞ்சீபுரம் அருகே லாரி–மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் சாவு
காஞ்சீபுரம் அருகே லாரி–மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் அருகே மாகரல் அடுத்த மலையாங்குளம் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 22). இவர் மோட்டார் சைக்கிளில் காவான்தண்டலம் பகுதியில் இருந்து வாலாஜாபாத் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

காஞ்சீபுரம் அருகே வள்ளிமேடு என்ற இடத்தில் செல்லும்போது, கண் இமைக்கும் நேரத்தில் ஒரு லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் பிரபாகரன் அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.தொடர்புடைய செய்திகள்

1. ரெயில் சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி
வேலை தேடி மும்பை வந்த வாலிபர் ரெயில் சக்கரத்தில் சிக்கி பலியானார்.
2. பர்கூர் வனப்பகுதியில் வயது முதிர்வால் ஆண் யானை சாவு
பர்கூர் வனப்பகுதியில் வயது முதிர்வால் ஆண் யானை இறந்தது.
3. பூந்தமல்லியில் 2–வது மாடியில் இருந்து விழுந்து தொழிலாளி சாவு
பூந்தமல்லியில் மாடியில் இருந்து விழுந்து தொழிலாளி இறந்தார்.
4. காவிரி ஆற்றில் மூழ்கி இரட்டை குழந்தைகள் சாவு; திதி கொடுக்க வந்தவர்களுக்கு நேர்ந்த பரிதாபம்
திதி கொடுக்க சென்றபோது காவிரி ஆற்றில் மூழ்கி இரட்டை குழந்தைகள் இறந்தன.
5. பேராவூரணி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; டிரைவர் பலி
பேராவூரணி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்ட விபத்தில் டிரைவர் பலியானார். மேலும், வாலிபர் படுகாயம் அடைந்தார்.