பிளஸ்–2 தேர்வு முடிவு வெளியீடு திருவள்ளூர் மாவட்டத்தில் 87.17 சதவீதம் மாணவ–மாணவிகள் தேர்ச்சி
திருவள்ளூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. இதில் 87.17 சதவீதம் மாணவ–மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி பிளஸ்–2 தேர்வு முடிவுகளை வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:–
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 334 பள்ளிகளில் 20 ஆயிரத்து 848 மாணவர்கள், 23 ஆயிரத்து 38 மாணவிகள் என மொத்தம் 43 ஆயிரத்து 886 பேர் தேர்வு எழுதினர்.
அவர்களில் மாணவர்கள் 17 ஆயிரத்து 167 பேரும், மாணவிகள் 21 ஆயிரத்து 88 பேர் என மொத்தம் 38 ஆயிரத்து 255 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 91.54 சதவீதம், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 82.34 சதவீதம் ஆகும். இதில் மாணவர்களை விட மாணவிகளே கூடுதல் தேர்ச்சி பெற்றனர்.
திருவள்ளூர் மாவட்ட மாணவ–மாணவிகள் தேர்ச்சி விகிதம் 87.17 சதவீதம் ஆகும். கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 87.57 சதவீதம் ஆகும். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 0.4 சதவீதம் குறைவு. அரசு பள்ளிகளில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 90 அரசு பள்ளிகளில் தேர்வு எழுதிய 7 ஆயிரத்து 280 மாணவர்கள், 9 ஆயிரத்து 40 மாணவிகள் என மொத்தம் 16 ஆயிரத்து 320 பேர் தேர்வு எழுதினார்கள்.
இதில் 4 ஆயிரத்து 452 மாணவர்கள், 7 ஆயிரத்து 472 மாணவிகள் என மொத்தம் 11 ஆயிரத்து 924 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் மொத்த தேர்ச்சி விகிதம் 73.06 சதவீதம் ஆகும்.
அதேபோல் திருவள்ளூரை அடுத்த பூந்தமல்லியில் உள்ள பார்வையற்றோர் பள்ளியில் தேர்வு எழுதிய 20 மாணவர்களில் அனைவரும் தேர்ச்சி பெற்று 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 3 நகராட்சி பள்ளிகளில் தேர்வு எழுதிய 208 மாணவர்களில் 154 பேர் தேர்ச்சி பெற்றனர். இதன் தேர்ச்சி விகிதம் 74.04 சதவீதம் ஆகும். 5 ஆதிதிராவிடர் பள்ளிகளில் தேர்வு எழுதிய 380 பேரில் 241 பேர் தேர்ச்சி பெற்றனர்.
இதன் தேர்ச்சி விகிதம் 63.42 சதவீதம் ஆகும். 13 அரசு நிதிஉதவி பெறும் பள்ளிகளில் தேர்வு எழுதிய 3 ஆயிரத்து 672 பேரில் 3 ஆயிரத்து 399 பேர் தேர்ச்சி பெற்றனர். இதன் தேர்ச்சி விகிதம் 92.57 சதவீதம் ஆகும்.
28 சுயநிதி பள்ளிகளில் தேர்வு எழுதிய 3 ஆயிரத்து 87 பேரில் 2 ஆயிரத்து 871 பேர் தேர்ச்சி பெற்றனர். இதன் மொத்த தேர்ச்சி விகிதம் 93 சதவீதம் ஆகும். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 192 மெட்ரிக் பள்ளிகளில் தேர்வு எழுதிய 20 ஆயிரத்து 199 பேரில் 19 ஆயிரத்து 646 பேர் தேர்ச்சி பெற்றனர்.
இதன் மொத்த தேர்ச்சி விகிதம் 97.26 சதவீதம் ஆகும்.
அப்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனைவர் ராஜேந்திரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் திருவரசு மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
இவ்வாறு அவர் கூறினார்.