வேப்பந்தட்டை பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் கலெக்டர் ஆய்வு


வேப்பந்தட்டை பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 17 May 2018 4:00 AM IST (Updated: 17 May 2018 1:40 AM IST)
t-max-icont-min-icon

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மாவட்ட கலெக்டர் சாந்தா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வேப்பந்தட்டை,

வேப்பந்தட்டை பகுதியில் உள்ள வி.களத்தூர், பசும்பலூர், கை.களத்தூர் ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மாவட்ட கலெக்டர் சாந்தா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்த நோயாளிகளிடம், மருத்துவர்கள் தினந்தோறும் வந்து சிகிச்சையினை வழங்குகிறார்களா, மருந்துகள் தொடர்ந்து வழங்கப்படுகின்றதா என கேட்டறிந்தார். பின்னர் மருத்துவர்களிடம் பொதுமக்களுக்கு தேவையான மருந்துகள் இருப்பு உள்ளதா என்றும், அடிப்பை வசதிகள் போதுமான வகையில், இருக்கிறதா என்றும் கேட்டறிந்தார். தொடர்ந்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில், இயங்கி வரும் சித்த மருத்துவ பிரிவை பார்வையிட்டு கருவுற்ற தாய்மார்களுக்கு அம்மா மகப்பேறு சஞ்சீவி பெட்டகம் கிடைக்கிறதா, அவற்றை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பது குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) சேதுராமன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் சம்பத், மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அலுவலர் அரவிந்தன் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story