மாவட்ட செய்திகள்

தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் பிளஸ்-2 மாணவி தற்கொலை + "||" + Plus-2 student suicides because of the low score in the exam

தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் பிளஸ்-2 மாணவி தற்கொலை

தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் பிளஸ்-2 மாணவி தற்கொலை
நாமகிரிப்பேட்டை அருகே பிளஸ்-2 தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நாமகிரிப்பேட்டை,

நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள ஆர்.பி.காட்டுரைச்சேர்ந்தவர் கந்தசாமி. கூலித்தொழிலாளி. இவரது மனைவி செல்வி. இவர்களது மகள் தேவி (வயது 17). இவர் ராசிபுரம் அருகே ஆர்.புதுப்பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். நேற்று தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் தேவி 1,200-க்கு 552 மதிப்பெண் பெற்று இருந்தார்.


தற்கொலை

இதனால் தேவி மனம் உடைந்தார். குறைந்த மதிப்பெண் பெற்று விட்டோமே என நினைத்து சோகத்துடன் காணப்பட்டார். நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாதபோது தேவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி நாமகிரிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகிறார்.