பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியீடு: தஞ்சை மாவட்டத்தில் 90.25 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி


பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியீடு: தஞ்சை மாவட்டத்தில் 90.25 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி
x
தினத்தந்தி 17 May 2018 4:15 AM IST (Updated: 17 May 2018 2:43 AM IST)
t-max-icont-min-icon

பிளஸ்-2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. தஞ்சை மாவட்டத்தில் 90.25 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 2.27 சதவீதம் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது.

தஞ்சாவூர்,

பிளஸ்-2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, கும்பகோணம், பட்டுக்கோட்டை ஆகிய 3 கல்வி மாவட்டங்கள் உள்ளன. இந்த 3 கல்வி மாவட்டங்களிலும் 88 அரசு பள்ளிகள், 27 அரசு உதவி பெறும் பள்ளிகள் 59 மெட்ரிக் பள்ளி மற்றும் சுயநிதி பள்ளிகள் என மொத்தம் 212 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் இந்த தேர்வினை எழுதினர்.

மாணவர்கள் 13 ஆயிரத்து 116 பேரும், மாணவிகள் 16 ஆயிரத்து 131 பேரும் என மொத்தம் 29 ஆயிரத்து 247 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் மாணவர்கள் 11 ஆயிரத்து 212 பேரும், மாணவிகள் 15 ஆயிரத்து 183 பேரும் என மொத்தம் 26 ஆயிரத்து 395 மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். தேர்ச்சி சதவீதம் 90.25 ஆகும்.

கடந்த ஆண்டை விட குறைவு

கடந்த ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் 92.47 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 2.27 சதவீதம் குறைவாக மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என தஞ்சை மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி சுபாஷினி தெரிவித்தார். 

Next Story