மாவட்ட செய்திகள்

மந்திரி சபை கூட்டத்தில் சிவசேனா எதிர்ப்பு + "||" + Shiv Sena protests at ministerial meeting

மந்திரி சபை கூட்டத்தில் சிவசேனா எதிர்ப்பு

மந்திரி சபை கூட்டத்தில் சிவசேனா எதிர்ப்பு
உப்பு படுகை நிலங்களில் வீட்டுமனைகளுக்கு அனுமதி வழங்கும் முடிவுக்கு மந்திரி சபை கூட்டத்தில் சிவசேனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
மும்பை,

மாநில அரசின் ‘மும்பை மேம்பாட்டு திட்டம் 2034’ குறித்த மந்திரி சபை கூட்டம் நேற்று மும்பையில் நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது மும்பையில் உள்ள உப்பு படுகைகளில் வீட்டுமனைகள் கட்டுவதற்கு அனுமதி வழங்க மந்திரி சபை சார்பில் முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

இந்தநிலையில் உப்புபடுகை நிலங்களில் வீட்டுமனைகளுக்கு அனுமதி அளிப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என கூறி மாநில சுற்றுச்சூழல் மந்திரி ராம்தாஸ் கதம்(சிவசேனா) இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

ஏற்கனவே நானார் பெட்ரோலிய சுத்திகரிப்பு திட்டம் தொடர்பாக சிவசேனா மற்றும் பா.ஜனதாவுக்கு இடையே மோதல் போக்கு நிலவி வருகையில், தற்போதைய உப்பு படுகை விவகாரம் தொடர்பாக புதிய சர்ச்சை உருவாகி இருப்பது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னதாக கடந்த மாதம் மும்பை காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபம், மும்பை உப்புபடுகைகளை பாதுகாக்க கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது. 


தொடர்புடைய செய்திகள்

1. முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மரண தினம் குறித்து சிவசேனா சந்தேகம்
பல்வேறு உடல் நலக்கோளாறுகளால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய், கடந்த 16–ந் தேதி மாலையில் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
2. செங்கோட்டையில் பிரதமர் மோடி 2019 தேர்தல் பிரச்சார பேச்சை பேசியுள்ளார் சிவசேனா விமர்சனம்
செங்கோட்டையில் பிரதமர் மோடி 2019-ம் ஆண்டுக்கான தேர்தல் பிரச்சார பேச்சை மேற்கொண்டுள்ளார் என சிவசேனா விமர்சனம் செய்துள்ளது. #ShivSena #PMModi
3. மராட்டியத்தில் தனியாக போட்டியிட தயாராகும் பா.ஜனதா ‘மோடிக்காக நாங்கள் போராட முடியாது’ சிவசேனா தாக்கு
மராட்டியத்தில் 2019 தேர்தல்களில் தனித்து போட்டியிட தயாராகுங்கள் நிர்வாகிகள், தலைவர்களிடம் அமித்ஷா கூறியுள்ளார். #AmitShah #BJP
4. கட்டிப்பிடித்தல் அல்ல; மோடிக்கு ராகுல் காந்தி அளித்த ‘ஷாக்’: சிவசேனா கருத்து
கட்டிப்பிடித்தல் அல்ல; மோடிக்கு ராகுல் காந்தி அளித்த ‘ஷாக்’ என்று சிவசேனா கருத்து தெரிவித்துள்ளது. #PMModi #RahulGandhi
5. புல்லட் ரெயிலுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்யும்போது, விவசாயிகளுக்கு 5 ரூபாய் கூட்ட முடியாது? சிவசேனா கேள்வி
மராட்டியத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பால் உற்பத்தியாளர்களுக்கு சிவசேனா கட்சி தன்னுடைய ஆதரவை தெரிவித்துள்ளது. #ShivSena #DairyFarmers