பிளஸ்-2 தேர்வு முடிவு: மாவட்டத்தில் 30 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி
கடலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் 30 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
கடலூர்
கடலூர் மாவட்டத்தில் 218 பள்ளிகளை சேர்ந்த 30 ஆயிரத்து 952 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 பொதுத்தேர்வை எழுதினர். இந்த தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. இதனை மாணவ-மாணவிகள் அந்தந்த பள்ளிகளுக்கு சென்றும், செல்போனிலும் தங்களது மதிப்பெண்ணை பார்த்தனர். பள்ளிகளில் உள்ள தகவல் பலகையில் ஒட்டப்பட்டிருந்த பிளஸ்-2 தேர்வு முடிவை மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் பார்த்தனர்.
கடலூர் மாவட்டத்தில் 26 ஆயிரத்து 833 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இதில் 30 பள்ளிகளில் தேர்வு எழுதிய மாணவ-மாணவிகள் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் 30 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
இதில் கடலூர் கல்வி மாவட்டத்தில் 21 பள்ளிகளும், விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் 9 பள்ளிகள் என மொத்தம் 30 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. தேர்ச்சி பெற்ற பள்ளிகள் விவரம் வருமாறு:-
சி.கே.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி கடலூர், அரசு மேல்நிலைப்பள்ளி சாமியார்பேட்டை, அரசு சேவை இல்ல மேல்நிலைப்பள்ளி கடலூர், அருணாச்சலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி குறிஞ்சிப்பாடி, காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வெய்யலூர், காமாட்சி சண்முகம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி கடலூர், கிருஷ்ணசாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி எஸ்.குமராபுரம், மங்களம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி புவனகிரி, நிர்மலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சிதம்பரம். ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி கடலூர் துறைமுகம், ஸ்ரீ வள்ளியம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திருப்பாதிரிப்புலியூர், புனித வளனார் குளூனி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நெய்வேலி, புனிதபால் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி குறிஞ்சிப்பாடி, ஈஷா வித்யா மெட்ரிக் பள்ளி மடவாப்பள்ளம், அன்னை தெரசா மெட்ரிக் பள்ளி சாத்திப்பட்டு, முஸ்தபா மெட்ரிக் பள்ளி சிதம்பரம், பி.ஆர்.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நெல்லிக்குப்பம், ராஜகுரு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி காடாம்புலியூர், ஸ்ரீ அருணாசலா மெட்ரிக் பள்ளி புவனகிரி, வள்ளலார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி கொள்ளுக்காரன்குட்டை, ஆனந்தன் நினைவு மெட்ரிக் பள்ளி குள்ளஞ்சாவடி ஆகிய பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
இதேபோல் விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் மங்களூர் மாதிரி பள்ளி ம.புடையூர், ஸ்ரீ கிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பெண்ணாடம், வி.இ.டி. மேல்நிலைப்பள்ளி எருமனூர், அய்யனார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வேப்பூர், தவ அமுதம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஸ்ரீமுஷ்ணம், இமாம் கசாலி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி லால்பேட்டை, இன்பேன்ட் பிரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விருத்தாசலம், ராஜீவ்காந்தி நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நாட்டார்மங்கலம், டாக்டர் ஏ.கே.பி. ஆக்ஸ்பிரிட்ஜ் மெட்ரிக் பள்ளி சிறுபாக்கம் ஆகிய பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
Related Tags :
Next Story