களக்காடு அருகே மணல் கடத்திய 14 பேர் கைது; 2 லாரிகள் பறிமுதல்


களக்காடு அருகே மணல் கடத்திய 14 பேர் கைது; 2 லாரிகள் பறிமுதல்
x
தினத்தந்தி 18 May 2018 2:00 AM IST (Updated: 17 May 2018 7:51 PM IST)
t-max-icont-min-icon

களக்காடு அருகே மணல் கடத்திய 14 பேரை போலீசார் கைது செய்து, 2 லாரிகளை பறிமுதல் செய்தனர்.

களக்காடு, 

களக்காடு அருகே மணல் கடத்திய 14 பேரை போலீசார் கைது செய்து, 2 லாரிகளை பறிமுதல் செய்தனர்.

லாரிகளில் மணல் கடத்தல் 

நாங்குநேரி உதவி போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உத்தரவின்பேரில், களக்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் மேரி ஜெமிதா, சப்– இன்ஸ்பெக்டர்கள் பார்த்தீபன், ஜெகநாதன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவில் சுற்று வட்டார பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது களக்காடு அருகே கீழதேவநல்லூர் பச்சையாற்றில் 2 லாரிகளில் சிலர் மணல் அள்ளிக் கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

மணல் கடத்தியதாக களக்காடு அருகே சிதம்பரபுரத்தைச் சேர்ந்த லாரி டிரைவர்களான சரவணன் (வயது 36), கிருஷ்ணகுமார் (35), ஜெயராஜ் மகன் செல்வராஜ் (29), காளிதாஸ் மகன் முருகன் (33), பண்டாரம் மகன் மதன் (30), கண்ணன் (42), சேதுராயபுரத்தைச் சேர்ந்த சிவசங்கர் (39), மாவடி புதூரைச் சேர்ந்த முத்தையா மகன் சேர்மபாண்டி (34), ராமகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகன் ரமேஷ் (34) ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்தனர். மணல் கடத்திய 2 லாரிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

சாக்கு மூட்டைகளில் மணல் கடத்திய... 

இதேபோன்று களக்காடு அருகே பத்மநேரி பச்சையாற்றில் இருந்து 15 சாக்கு மூட்டைகளில் மணல் கடத்திய, களக்காடு அருகே சிதம்பரபுரத்தைச் சேர்ந்த முருகன் (47), நடராஜன் மகன் சேகர் (32), குமார் (35), ராஜ் மகன் மணிகண்டன் (27), உமர் மகன் இப்ராஹிம்ஷா என்ற ஷேக் (33) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

கைதான 14 பேரையும் போலீசார் நாங்குநேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

Next Story