மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி கட்டுரைகள் வெளியிட புதிய நடைமுறை அமல் பதிவாளர் தகவல்
இதழ்களில் முதல் ஆசிரியராகவோ அல்லது இரண்டாம் ஆசிரியராகவோ ஆராய்ச்சி கட்டுரைகள் ஆராய்ச்சியாளர்களால் வெளியிடப்பட வேண்டும்.
நெல்லை,
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மானியக்குழுவின் விதிமுறைகளின் படி, பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள ஆராய்ச்சி இதழ்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ள இதழ்களில் முதல் ஆசிரியராகவோ அல்லது இரண்டாம் ஆசிரியராகவோ ஆராய்ச்சி கட்டுரைகள் ஆராய்ச்சியாளர்களால் வெளியிடப்பட வேண்டும்.
மேலும் ஆராய்ச்சி இதழ்கள், மாநாடு, பயிலரங்கம் மற்றும் பயிற்சி பட்டறை ஆகியவற்றில் வெளியிடப்படும் கட்டுரைகளில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் இணைவு குறித்த விவரங்களும், முழு விலாசமும் (மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், அபிஷேகப்பட்டி, திருநெல்வேலி–627012, தமிழ்நாடு, இந்தியா) கண்டிப்பாக இடம் பெற்றிருக்க வேண்டும். மேற்கூறிய விவரங்களின்படி இருந்தால் மட்டுமே ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்தலுக்கும், மற்ற சான்றிதழ்கள் பெறுவதற்கும் அனுமதிக்கப்படும். மேற்கூறிய அனைத்தும் வருகிற 1–ந் தேதியில் இருந்து நடைமுறைப்படுத்தப்படும்.
இந்த தகவலை நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் சந்தோஷ் பாபு தெரிவித்து உள்ளார்.