மாவட்ட செய்திகள்

ஆய்வின் போது குறைபாடு கண்டுபிடிப்பு: 17 பள்ளி வாகனங்களின் தகுதி சான்று ரத்து + "||" + Disability discovery during the study: Canceling the qualification of 17 school vehicles

ஆய்வின் போது குறைபாடு கண்டுபிடிப்பு: 17 பள்ளி வாகனங்களின் தகுதி சான்று ரத்து

ஆய்வின் போது குறைபாடு கண்டுபிடிப்பு: 17 பள்ளி வாகனங்களின் தகுதி சான்று ரத்து
பள்ளி வாகனங்களின் ஆய்வின் போது குறைபாடு கண்டறியப்பட்டதில் 17 வாகனங்களின் தகுதி சான்றை ரத்து செய்து கலெக்டர் ராஜாமணி நடவடிக்கை எடுத்தார்.
திருச்சி,

திருச்சி தீரன் நகரில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் மேற்கு வட்டார போக்குவரத்து துறை அலுவலகத்துக்குட்பட்ட பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து மாவட்ட கலெக்டர் ராஜாமணி தலைமையில் வருடாந்திர ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கலெக்டர் ராஜாமணி கூறியதாவது:-


பாதுகாப்பில்லாத வகையில் இயக்கப்படும் பள்ளி வாகனங்களை தகுதி நீக்கம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. திருச்சி மேற்கு மற்றும் மணப்பாறை போக்குவரத்துதுறை அலுவலகத்திற்கு உட்பட்ட 152 வாகனங்கள் நேற்று ஆய்வு செய்யப்பட்டன. இதில் 17 வாகனங்களில் குறைபாடுகள் கண்டறியப்பட்டு, தகுதிச்சான்று தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன.

கண் பரிசோதனை

ஆய்வின் போது பள்ளி வாகன ஓட்டுநர்களுக்கு தனியார் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை செய்யப்பட்டு 152 ஓட்டுனர்களில் 16 ஓட்டுனர் களுக்கு கண் குறைபாடு கண்டறியப்பட்டு மேல் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டு அந்தந்த பள்ளி தாளாளர் களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஓட்டுனர்களுக்கு தீயணைப்பு கருவிகள் மூலம் தீயை அணைப்பது தொடர்பாக செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது உதவி கலெக்டர் கமல்கிஷோர், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராமகிருஷ்ணன், போக்குவரத்து துணை ஆணையர் உமாசக்தி, போலீஸ் உதவி கமிஷனர் அருணாச்சலம், தீயணைப்பு மீட்பு பணிகள்துறை உதவி மாவட்ட அலுவலர் கருணாகரன், மோட்டார் வாகன ஆய்வாளர் உமாமகேஸ்வரி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

கலெக்டர் எச்சரிக்கை

ஆய்வின் போது போக்குவரத்து அதிகாரிகளை கடுமையாக கலெக்டர் ராஜாமணி எச்சரித்தார். பள்ளி தொடங்குவதற்கு முன்பாகவே அனைத்து வாகனங்களும் தயார் செய்து நல்ல முறையில் நிர்வாகம் வைத்திருக்க வேண்டும். ஆனால், ஏதோ ஆய்வுக்காக மட்டும் வாகனங்களை கொண்டு வந்து நிறுத்துவது சரியல்ல. அதிகாரிகளும் உரிய ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றார். 

தொடர்புடைய செய்திகள்

1. தொப்பூர் அருகே போலி டாக்டர் கைது
தொப்பூர் அருகே போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர்.
2. கடைவீதியில் உள்ள மளிகை கடை, ஓட்டல், பெட்டிக்கடை, பேக்கரி, ஜவுளிக்கடை போன்ற கடைகளில் திடீர் ஆய்வு
ஆண்டிமடம் கடைவீதியில் உள்ள மளிகை கடை, ஓட்டல், பெட்டிக்கடை, பேக்கரி, ஜவுளிக்கடை போன்ற கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? அல்லது விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதா? என்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
3. குட்கா பதுக்கிய வழக்கில் ‘சீல்’ வைக்கப்பட்ட மளிகைக்கடையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு
கரூரில் குட்கா பதுக்கிய வழக்கில் ‘சீல்‘ வைக்கப்பட்ட மளிகைக்கடையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் 2 ஓட்டல்களிலும் விசாரணை நடத்தினர்.
4. அரசு பள்ளியில் அமைச்சர் செங்கோட்டையன் திடீர் ஆய்வு ஆசிரியர்களின் வருகை பற்றி கேட்டறிந்தார்
மாயனூர் அரசு பள்ளியில் அமைச்சர் செங்கோட்டையன் திடீரென ஆய்வு செய்து, ஆசிரியர்களின் வருகை பற்றி கேட்டறிந்தார்.
5. திருவாரூர் தியாகராஜர் கோவில் சிலை பாதுகாப்பு மையத்தில் 2-வதுநாளாக தொல்லியல் துறையினர் ஆய்வு
திருவாரூர் தியாகராஜர் கோவில் சிலை பாதுகாப்பு மையத்தில் 2-வதுநாளாக தொல்லியல் துறையினர் ஆய்வு செய்தனர்.