மாவட்ட செய்திகள்

இரு தரப்பினர் இடையே மோதல்; சிறுவன் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு + "||" + Conflict between the two sides; The case involving 7 people including the boy

இரு தரப்பினர் இடையே மோதல்; சிறுவன் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு

இரு தரப்பினர் இடையே மோதல்; சிறுவன் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு
அரவக்குறிச்சி அருகே இரு தரப்பினர் இடையே மோதல்; சிறுவன் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு
அரவக்குறிச்சி,

அரவக்குறிச்சி அருகே உள்ள வேலம்பாடிகாலனியை சேர்ந்தவர் செல்வன்(வயது 48). இவர் தனது மோட்டார் சைக்கிளில் அப்பகுதியில் சென்று கொண்டு இருந்தார். அப்போது முன்னாள் சென்ற கார் அவருக்கு வழி விடவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் காரில் சென்ற புளியங்காட்டு தோட்டம் இச்சிப்பட்டி பிரிவை சேர்ந்த குப்புசாமிக்கும், செல்வனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் செல்வன் தரப்பை சேர்ந்தவர் களுக்கும், காரில் சென்ற குப்புசாமி தரப்பை சேர்ந்தவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் காயம் அடைந்த செல்வன், அவரது மகன் அபிமன்யூ(23) மற்றும் 16 வயதுடைய ஒரு சிறுவன் ஆகிய 3 பேரும் பள்ளப்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். குப்புசாமி, புலியங்காட்டு தோட்டம் இச்சிப்பட்டி பிரிவை சேர்ந்த ஏகாம்பரம்(45), நல்லுசாமி(57), ராமசாமி(35) ஆகிய 4 பேரும் அரவக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் நல்லுசாமியும், ராமசாமியும் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இதுகுறித்து இரு தரப்பினரும் அளித்த புகாரின் பேரில் சிறுவன் உள்பட 7 பேர் மீதும் அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.