மாவட்ட செய்திகள்

8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அரசு பள்ளி ஆசிரியர் கைது + "||" + A teacher of sexually harassed school teacher arrested for class 8

8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அரசு பள்ளி ஆசிரியர் கைது

8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அரசு பள்ளி ஆசிரியர் கைது
செல்போனில் ஆபாசமாக பேசி 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அரசு பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
அரியாங்குப்பம்

புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதியில் உள்ள அரசு நடு நிலைப்பள்ளியில் மணவெளியை சேர்ந்த புவியரசன் (வயது 30) என்பவர் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் அங்கு படித்த 8-ம் வகுப்பு மாணவியின் வீட்டு செல்போனுக்கு தொடர்பு கொண்டு, மாணவியிடம் ஆபாசமாக பேசி பாலியல் தொந்தரவு கொடுத்தாக கூறப்படுகிறது. நாளுக்கு நாள் இந்த தொந்தரவு அதிகரித்தது.

இது குறித்து அந்த மாணவி, தனது பெற்றோரிடம் தெரிவித்தார். அதன்பேரில் மாணவியின் பெற்றோர், பள்ளிக்கூட முதல்வரிடம் புகார் தெரிவித்தனர். இது குறித்து அவர், பள்ளி கல்வித்துறையிடம் புகார் செய்தார்.

அதன்பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி, ஆசிரியர் புவியரசன் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுத்து அவரை பணி இடைநீக்கம் செய்தனர். இந்த நிலையில் அரியாங்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து புவியரசனை நேற்று கைது செய்தனர். பின்னர் புதுவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. மழையூர் அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த 8-ம் வகுப்பு மாணவர் சாவு
மழையூர் அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த 8-ம் வகுப்பு மாணவர் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக இறந்தார். இதனால் உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.