மாவட்ட செய்திகள்

மதுக்கடையில் மோதல்: வாலிபர் பீர்பாட்டிலால் தாக்கப்பட்டார் + "||" + Clash of the pub The young man was attacked by bottle

மதுக்கடையில் மோதல்: வாலிபர் பீர்பாட்டிலால் தாக்கப்பட்டார்

மதுக்கடையில் மோதல்: வாலிபர் பீர்பாட்டிலால் தாக்கப்பட்டார்
பாகூர் அருகே மதுக்கடையில் ஏற்பட்ட மோதலில் ஒரு வாலிபர் பீர்பாட்டிலால் தாக்கப்பட்டார். அது தொடர்பாக 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
பாகூர்

பாகூரை அடுத்த குருவிநத்தம் சித்தேரியில் தனியார் மதுபானக் கடையும், அதனையொட்டி பாரும் உள்ளது. இந்த பாரில் மருதநாடு கிராமத்தைச் சேர்ந்த மனவளர்ச்சி குன்றிய பெண் ஒருவர் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் அந்த பெண் மது பாரில் துப்புரவு பணியில் ஈடுபட்டார்.

அப்போது மதுகுடித்துக் கொண்டிருந்த குருவிநத்தம் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் (வயது 30), அய்யப்பன் (28), சாவடியை சேர்ந்த பிரகாஷ் (25), ஆகியோர் அந்த பெண்ணிடம் தகராறு செய்தனர். அவர்களை அங்கு வந்து இருந்த நத்தப்பட்டு கிராமத்தை சேர்ந்த வாலிபர் ராஜசேகர் (25) தட்டிக் கேட்டார்.

அப்போது அவருக்கும், பெண்ணிடம் தகராறு செய்தவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ரமேஷ், அய்யப்பன், பிரகாஷ் ஆகிய 3 பேரும் சேர்ந்து ராஜசேகரை சரமாரியாக தாக்கினார்கள். அவரை பீர்பாட்டிலால் அடித்து தலையில் தாக்கியதாகவும் கூறப் படுகிறது.

இதில் படுகாயமடைந்த ராஜசேகர் புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில் பாகூர் போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் அருள்மணி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து ரமேஷ், அய்யப்பன், பிரகாஷ் ஆகிய 3 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.


தொடர்புடைய செய்திகள்

1. காதல் மனைவி புகார் கொடுத்ததால் போலீஸ் விசாரணைக்கு பயந்து வாலிபர் தற்கொலை
அருமனை அருகே காதல் மனைவி புகார் கொடுத்ததால் போலீஸ் விசாரணைக்கு பயந்து வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
2. மலேசியாவில் வேலை பார்த்த வாலிபர் மர்ம சாவு உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர கலெக்டரிடம் கோரிக்கை
மலேசியாவில் ஓட்டலில் வேலை பார்த்த கறம்பக்குடி வாலிபர் மர்மமான முறையில் இறந்தார். அவருடைய உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு, புதுக்கோட்டை கலெக்டருக்கு, வாலிபரின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
3. கோவிலில் விளக்கு ஏற்றிய தகராறு: தொழிலாளி அடித்து கொலை வாலிபர் கைது
கோவிலில் விளக்கு ஏற்றுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
4. திருவரங்குளத்தில் கோவில்கள் உள்பட 4 இடங்களில் திருட முயன்ற வாலிபர் கைது
திருவரங்குளத்தில் கோவில்கள் உள்பட 4 இடங்களில் திருட முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
5. திருவாரூரில்: வாலிபர் மீது இரும்பு கம்பியால் தாக்குதல் - 2 பேர் கைது
திருவாரூரில் முன்விரோதம் காரணமாக வாலிபரை இரும்பு கம்பியால் தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.