ஸ்ரீவைகுண்டம் அருகே மதிப்பெண்கள் குறைந்ததால் விபரீதம்: பிளஸ்–2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
ஸ்ரீவைகுண்டம் அருகே மதிப்பெண்கள் குறைந்ததால் பிளஸ்–2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட
ஸ்ரீவைகுண்டம்,
ஸ்ரீவைகுண்டம் அருகே மதிப்பெண்கள் குறைந்ததால் பிளஸ்–2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பிளஸ்–2 மாணவிதூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள மீனாட்சிபட்டி பெருமாள் கோவில் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் மாரிசெல்வம், லாரி டிரைவர். இவருக்கு மனைவி மற்றும் 3 மகள்கள். மூத்த மகள் மகாலட்சுமி (வயது 17). இவர் முடிவைத்தானேந்தலில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் பிளஸ்–2 படித்தார். இவர் பிளஸ்–2 தேர்வில் 654 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்தார்.
தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதால், மகாலட்சுமி மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென்று கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
போலீசார் விசாரணைஇதுகுறித்து தகவல் அறிந்ததும், ஸ்ரீவைகுண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தற்கொலை செய்த மகாலட்சுமியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவைகுண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேர்வில் மதிப்பெண்கள் குறைந்ததால் பிளஸ்–2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.