தூத்துக்குடியில் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்


தூத்துக்குடியில் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 19 May 2018 2:30 AM IST (Updated: 18 May 2018 7:00 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு நேற்று காலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் தேவசகாயம், இணை செயலாளர் ஜெயராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட அமைப்பாளர் பீட்டர், பொருளாளர் தங்க காசிராஜா, மகளிர் அணி இணை செயலாளர் ராஜேசுவரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கோரிக்கைகள்

ஆர்ப்பாட்டத்தில் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வில் பணி மாறுதல் வழங்கிய பின்னர் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும். பள்ளிக்கல்வித்துறை தொடக்க கல்வித் துறைகளில் பணி நிரவலை முழுமையாக கைவிடவேண்டும். கிராமப்புற பள்ளிகளை அரசே மூட நினைக்கும் முடிவை கைவிட வேண்டும். அரசு பள்ளிகளை பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பினர்.

யார்–யார்?

ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சேகர், மாவட்ட அமைப்பாளர் சிவசங்கரன், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு மாநில பொருளாளர் செல்லையா, மாநில மகளிர் அணி செயலாளர் ஜேனட் பொற்செல்வி, மாவட்ட செயலாளர் பூசைதுரை உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.


Next Story