வாலாஜாபாத் அருகே பஸ் மோதி தொழிலாளி சாவு
வாலாஜாபாத் அருகே பஸ் மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
வாலாஜாபாத்,
வாலாஜாபாத் அருகே உள்ள வில்லிவலம் கிராமத்தை சேர்ந்தவர் சின்னதம்பி (வயது 35). கூலித்தொழிலாளி. இவர் மோட்டார் சைக்கிளில் தனது உறவினர் தினேஷ் (வயது 15) என்பவரை அழைத்துக்கொண்டு வேலை நிமித்தமாக காஞ்சீபுரம் சென்று விட்டு வில்லிவலம் திரும்பி கொண்டிருந்தார். அய்யன்பேட்டை அருகே வந்த போது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சரிந்தது.
இதில் சின்னதம்பியும், தினேஷும் எதிர்பாரதவிதமாக சாலையில் விழுந்தனர். அப்போது காஞ்சீபுரத்தில் இருந்து வாலாஜாபாத் நோக்கி வேகமாக வந்த அரசு பஸ் இவர்கள் மீது மோதியது. இதில் சின்னதம்பி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
தினேஷ் லேசான காயம் அடைந்தார். விபத்து குறித்து அறிந்தவுடன் வாலாஜாபாத் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Related Tags :
Next Story