கோட்டூர்புரம் பகுதியில், செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது
கோட்டூர்புரம் பகுதியில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 3 வாலிபர்களை கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் கைது செய்தனர்.
அடையாறு,
சென்னை கோட்டூர்புரம் பகுதியில் தனியாக நடந்து செல்பவர்களிடம் மோட்டார் சைக்கிளில் வரும் ஆசாமிகள் செல்போன்களை பறித்து செல்வதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து கோட்டூர்புரம் போலீசார், செல்போன் பறிப்பு சம்பவம் நடந்த ஒரு இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆராய்ந்தனர்.
அவர்கள் 3 பேரும் தேனாம்பேட்டை எஸ்.எம்.நகர் பகுதியில் பதுங்கி இருப்பதாக வந்த தகவலின்பேரில் கோட்டூர்புரம் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று 3 பேரையும் சுற்றி வளைத்து பிடித்தனர்.
பின்னர் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தனர். அதில் அவர்கள், தேனாம்பேட்டையை சேர்ந்த சம்பத் (வயது 25), அதே பகுதியை சேர்ந்த லோகேஷ் (21), பாலாஜி (24) என்பதும், 3 பேரும் கோட்டூர்புரம், அபிராமபுரம் பகுதிகளில் செல்போன் பறிப்பில் ஈடுபட்டதையும் ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4 செல்போன்கள், மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் கைதான 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
3 பேரும் ஏற்கனவே செல்போன் பறிப்பு வழக்கில் கோடம்பாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். அந்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த அவர்கள், மீண்டும் செல்போன் பறிப்பில் ஈடுபட்டது தெரிந்தது.
தியாகராயநகர், தேனாம்பேட்டை, வள்ளுவர் கோட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் செல்போன் பறிப்பில் அவர்கள் ஈடுபட்டார்களா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அதில் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் செல்போன் பறிப்பில் ஈடுபடும் காட்சி பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை வைத்து மர்மநபர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
அவர்கள் 3 பேரும் தேனாம்பேட்டை எஸ்.எம்.நகர் பகுதியில் பதுங்கி இருப்பதாக வந்த தகவலின்பேரில் கோட்டூர்புரம் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று 3 பேரையும் சுற்றி வளைத்து பிடித்தனர்.
பின்னர் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தனர். அதில் அவர்கள், தேனாம்பேட்டையை சேர்ந்த சம்பத் (வயது 25), அதே பகுதியை சேர்ந்த லோகேஷ் (21), பாலாஜி (24) என்பதும், 3 பேரும் கோட்டூர்புரம், அபிராமபுரம் பகுதிகளில் செல்போன் பறிப்பில் ஈடுபட்டதையும் ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4 செல்போன்கள், மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் கைதான 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
3 பேரும் ஏற்கனவே செல்போன் பறிப்பு வழக்கில் கோடம்பாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். அந்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த அவர்கள், மீண்டும் செல்போன் பறிப்பில் ஈடுபட்டது தெரிந்தது.
தியாகராயநகர், தேனாம்பேட்டை, வள்ளுவர் கோட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் செல்போன் பறிப்பில் அவர்கள் ஈடுபட்டார்களா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story