நேரடியாக உதவி செய்ய முடியாததால் தீயணைப்பு வீரர்கள் மூலம் உயிர்களை கடவுள் காப்பாற்றுகிறார்
நேரடியாக உதவி செய்ய முடியாததால் தீயணைப்பு வீரர்கள் மூலம் உயிர்களை கடவுள் காப்பாற்றுகிறார் என்று விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் பெருமிதம் கொண்டார்.
வேலூர்,
தமிழ்நாடு தீயணைப்பு துறை சார்பில் வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்கள் அடங்கிய வடமேற்கு மண்டலம் சார்பில் தீயணைப்பு வீரர்களுக்கான விளையாட்டு போட்டிகள் வேலூரில் நடைபெற்றது. இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நேற்று நேதாஜி விளையாட்டு மைதானத்தில் நடந்தது. இதில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டதை வேலூர் தீயணைப்பு வீரர்கள் பெற்றனர்.
அதனை தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவிற்கு வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் தலைமை தாங்கினார். வடமேற்கு மண்டல துணை இயக்குனர் சத்தியநாராயணன் முன்னிலை வகித்தார். காஞ்சீபுரம் மாவட்ட அலுவலர் சையது முகமதுஷா வரவேற்றார்.
போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் பரிசுகளை வழங்கி பேசியதாவது:-
தீயணைப்பு வீரர்களாகிய நீங்கள் இக்கட்டான நிலையில் ஒருவர் இருக்கும்போது அவருக்கு உதவி கரம், உயிர் கரம் நீட்டி காப்பாற்றுகிறீர்கள். இது மாபெரும் அறம் ஆகும். இச்சமூகத்தில் உங்கள் மீதான பார்வை கூடுதல் பொறுப்புகள் வாய்ந்ததாக உள்ளது. பலரை காப்பாற்றுவதால் நீங்களும் ஒரு காவலர். கடவுள் எல்லாருக்கும் நேரடியாக வந்து உதவி செய்ய முடியாது என்பதால் உங்கள் மூலமாக பலரை அவர் காப்பாற்றுகிறார். பொறுப்புகள் அதிகம் கொண்ட பணியை உணர்ந்து செய்யுங்கள். ஒரு உயிரை காக்கும் சந்தர்ப்பம் எல்லோருக்கும் அமைந்துவிடாது. இப்பணி உங்களுக்கு கடவுள் தந்த கொடை ஆகும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் நிலைய அலுவலர்கள், வீரர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வேலூர் மாவட்ட அலுவலர் முரளி நன்றி கூறினார்.

Related Tags :
Next Story