தேர்வில் குறைந்த மதிப்பெண் கிடைக்கும் என்ற பயத்தில் 10-ம் வகுப்பு மாணவர் விஷம் குடித்து தற்கொலை


தேர்வில் குறைந்த மதிப்பெண் கிடைக்கும் என்ற பயத்தில் 10-ம் வகுப்பு மாணவர் விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 19 May 2018 5:11 AM IST (Updated: 19 May 2018 5:11 AM IST)
t-max-icont-min-icon

கருங்கல் அருகே தேர்வில் குறைந்த மதிப்பெண் கிடைக்கும் என்ற பயத்தில் 10-ம் வகுப்பு மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இந்த பரிதாப சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது.

கருங்கல்,

கருங்கல் அருகே பூட்டேற்றி கண்ணன்தான்குழி மேக்கா விளாகத்தை சேர்ந்தவர் ராஜன் (வயது 50). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

ராஜனின் மனைவி அப்பகுதியில் உள்ள மாணவர்களுக்கு டியூசன் எடுத்து வருகிறார். இவர்களது மகன் ரிக்சன் (வயது 16). இவர் 10-ம் வகுப்பு தேர்வு எழுதி விட்டு முடிவுக்காக காத்திருந்தார். கடந்த சில நாட்களாக ரிக்சன், தேர்வு முடிவில் தனக்கு மதிப்பெண்கள் குறைந்து விடுமோ என்ற அச்சத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் ரிக்சன் வீட்டில் இருந்த விஷத்தை குடித்துவிட்டு மயங்கிய நிலையில் கிடந்தார். இதைக்கண்ட பெற்றோர் அதிர்ச்சி அடைந்து அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரிக்சன் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து ராஜன் கருங்கல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்று விடுவோமோ என்று பயந்து மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story