மரவள்ளி பயிரில் மாவுப்பூச்சி தாக்கத்தை கட்டுப்படுத்த கள ஆய்வு
பூதப்பாண்டி அருகே மரவள்ளி பயிரில் மாவுப்பூச்சி தாக்கத்தை கட்டுப்படுத்துவது தொடர்பான கள ஆய்வு கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமையில் நடந்தது.
நாகர்கோவில்,
மாறிவரும் தட்பவெப்ப நிலை மாற்றங்களால் தற்போது பூதப்பாண்டி வட்டாரம் துவரங்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மரவள்ளி பயிரில் மாவுப்பூச்சி தாக்கம் அதிக அளவில் காணப்படுகிறது. இதன் கள ஆய்வு கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமையில் துவரங்காடு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டது. இதில் திருப்பதிசாரம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள், திருவனந்தபுரம் மத்திய கிழங்கு பயிர்கள் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள், துணை இயக்குனர் (தோட்டக்கலைத்துறை) அசோக் மேக்ரின் மற்றும் அதிகாரிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
மாவுப்பூச்சியினை கட்டுப்படுத்தும் விதமாக செயல் விளக்கத் திடல்கள் துவரங்காடு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட வயல்களில் மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும் விவசாயிகள் நடும்போது மரவள்ளிக் குச்சிகளை பூச்சித் தாக்குதலில் இருந்து பாதுகாக்க ஒரு லிட்டர் தண்ணீரில் டைக்குளோர்வாஸ் 10 மில்லி என்ற அளவில் கலந்து குச்சியினை நனைத்து நடும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
மேலும் மத்திய கிழங்கு பயிர்கள் ஆராய்ச்சி நிலைய கண்டுபிடிப்பான ஸ்ரேயா 7 முதல் 10 மில்லியை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்தோ அல்லது நன்மா 7 முதல் 10 மில்லியை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்தோ ஒருவார இடைவெளியில் இலைத்தெளிப்பு செய்யும்படி அறிவுறுத்தப்பட்டனர். மேலும் இந்த பூச்சியை கட்டுப்படுத்த வயல்களில் காணப்படும் களைச்செடிகளை அகற்றுதல், சேதப்படுத்தப்பட்ட பகுதிகளை சேகரித்து அழித்தல் மற்றும் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு ஆகியவை குறித்த விழிப்புணர்வு விவசாயிகளிடம் ஏற்படுத்தப்பட்டது.

Related Tags :
Next Story