குமரி மாவட்டத்தில் 2 ஆயிரம் போலீசார் குவிப்பு
துறைமுக ஆதரவு மற்றும் எதிர்ப்பு போராட்ட அறிவிப்புகளால் குமரி மாவட்டத்தில் 2 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு இருப்பதாகவும், கூடுதலாக 28 சோதனைச் சாவடிகள் அமைத்துள்ளதாகவும் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் கூறினார்.
நாகர்கோவில்,
பன்னாட்டு சரக்கு பெட்டக மாற்று முனைய துறைமுக திட்டத்தை கைவிட வேண்டும் என்றும், அதற்கு பதிலாக குமரி மாவட்டத்தில் வர்த்தக துறைமுகம் கொண்டுவர வலியுறுத்தியும், ஒகி புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் உடனடியாக உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தியும், கடல் சீற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளுக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த கோரியும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, சரக்கு பெட்டக மாற்று முனைய திட்ட எதிர்ப்பாளர்கள் உள்பட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே குமரி மாவட்டத்தில் துறைமுகம் அமையவிடாமல் எம்.எல்.ஏ.க்கள் தடுப்பதாகவும், அவர்களை கண்டிப்பதாகவும் கூறி பா.ஜனதா கட்சி இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. மேலும் இதுதொடர்பான சுவரொட்டிகளும் ஆங்காங்கே ஒட்டப்பட்டன.
ஒரே நாளில் துறைமுக எதிர்ப்பு போராட்டம், ஆதரவு போராட்டம் குறித்த அறிவிப்புகள் வெளியானதால் குமரி மாவட்டத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற இருந்த போராட்டத்துக்கான அனுமதியை ரத்து செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உத்தரவிட்டார். மேலும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்பவர்கள் கைது செய்யப்படுவதோடு, அவர்களின் வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும் எனவும் அவர் அறிவித்தார்.
இருந்தாலும் திட்டமிட்டபடி போராட்டம் இன்று காலை நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகம் முன் நடைபெறும் என்று தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சியினர் அறிவித்துள்ளனர். “துறைமுக எதிர்ப்பு போராட்டத்துக்கான அனுமதியை ரத்து செய்து காவல்துறை எடுத்து வரும் நடவடிக்கை மனநிறைவு தருகிறது, எனவே வேலை நிறுத்தப்போராட்டம் தேவையில்லை“ என பா.ஜனதா கருதுகிறது. காவல்துறை போராட்டத்தை தடுக்க தவறும் பட்சத்தில், நாங்கள் போராட்டத்தில் இறங்குவோம் என்று அக்கட்சியினர் கூறியுள்ளனர்.
இந்தநிலையில் குமரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத்திடம் கேட்டபோது அவர் கூறியதாவது.
தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் அறிவித்துள்ள ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் பொதுமக்கள் யாரும் கலந்து கொள்ள வேண்டாம் எனவும், கலந்து கொண்டால் சட்டப்படி கைது செய்தும், அவர்கள் வரும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குமரி மாவட்டத்தில் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இதற்காக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து சிறப்புக்காவல் படை போலீசாரும், ஆயுதப்படை போலீசாரும் வரவழைக்கப்பட்டு உள்ளனர்.
தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. சைலேஷ்குமார் யாதவ் ஆலோசனையின் பேரில், நெல்லை சரக டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கார், குமரி, நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், நெல்லை துணை கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகளின் மேற்பார்வையில் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுகிறார்கள்.
மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போராட்ட அறிவிப்பையொட்டி 28 சோதனைச்சாவடிகள் கூடுதலாக அமைக்கப்பட்டு உள்ளன.
நாகர்கோவில் போராட்டத்துக்கு வரக்கூடியவர்கள் இந்த சோதனைச்சாவடிகளில் உள்ள போலீசார் மூலம் கைது செய்யப்படுவார்கள். வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும். இவ்வாறு போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் கூறினார்.
இந்தநிலையில் நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கார் நேற்று மாலை நாகர்கோவில் வந்தார். பின்னர் அவர் குமரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் மற்றும் கூடுதல் சூப்பிரண்டுகள், துணை சூப்பிரண்டுகள் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக் கூட்டம் மாலை 6 மணி முதல் இரவு 7.30 மணி வரை நடந்தது. இந்த கூட்டத்தில் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்தி குமார், நெல்லை மாநகர துணை கமிஷனர் சுகுணாசிங் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story