முதன்மை கல்வி அலுவலகம் முன்பு பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்


முதன்மை கல்வி அலுவலகம் முன்பு பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 19 May 2018 5:47 AM IST (Updated: 19 May 2018 5:47 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

தேனி,

தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்கக்கல்வித்துறையில் பணிநிரவலை முழுமையாக கைவிட வேண்டும். 1997–ம் ஆண்டு வரை கடைபிடிக்கப்பட்ட ஆசிரியர்–மாணவர் விகிதம் 1:20 என்பதை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். தனியார் பள்ளிகளை வளர்க்கவும், அரசுப் பள்ளிகளை மூடவும் வழி வகுத்துள்ள கல்வி உரிமை சட்டத்தின் மூலம் தமிழக அரசின் நிதியை தனியார் பள்ளிகளுக்கு வழங்குவதை நிறுத்த வேண்டும். ஒளிவு மறைவற்ற வெளிப்படையான கலந்தாய்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

 ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சந்திரன் முன்னிலை வகித்தார். மாவட்ட மகளிர் அணி செயலாளர் மணிமாலா வரவேற்றார். மாநில துணைத்தலைவர் திருநாவுக்கரசு மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினர். முடிவில் மாவட்ட பொருளாளர் செந்தில் நன்றி கூறினார்.


Next Story