அதிகாரிகள், பொருட்கள் இல்லாததால் புதிய ரே‌ஷன்கடையை திறந்து வைக்க எம்.எல்.ஏ மறுப்பு


அதிகாரிகள், பொருட்கள் இல்லாததால்  புதிய ரே‌ஷன்கடையை திறந்து வைக்க எம்.எல்.ஏ மறுப்பு
x
தினத்தந்தி 19 May 2018 10:30 PM GMT (Updated: 19 May 2018 7:01 PM GMT)

காரைக்குடியில் புதிய ரே‌ஷன் கடை திறப்பு விழாவில் அதிகாரிகள் மற்றும்பொருட்கள் இல்லாததால் அந்த கடையை கே.ஆர்.ராமசாமி எம்.எல்.ஏ. திறந்து வைக்க மறுப்பு தெரிவித்து புறப்பட்டு சென்றார்.

காரைக்குடி,

காரைக்குடி சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.7லட்சம் மதிப்பீட்டில் காரைக்குடி சுப்பிரமணியபுரத்தில் ரே‌ஷன் கடைக்கான புதிய கட்டிடம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நேற்று நடைபெறுவதாக இருந்தது.

தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி எம்.எல்.ஏ. தனது கட்சியினர் மற்றும் ஆதரவாளர்களுடன் அந்த புதிய கட்டிடத்தை திறந்து வைக்க வந்தார். அப்போது புதிய ரே‌ஷன் கடை கட்டிடத்தில் விற்பனையாளரான ஒரு பெண்ணும், தராசு மட்டுமே இருந்தது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் பொருட்கள் அங்கு இல்லை. இது குறித்து கே.ஆர்.ராமசாமி எம்.எல்.ஏ. அங்கு விற்பனையாளராக இருந்த பெண்ணிடம் விசாரித்தார். அதற்கு அவர் உரிய பதில் கூறவில்லை.

அதன் பின்னர் அவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை போன் மூலம் தொடர்புகொண்டு கேட்டார். அவர்களிடம் இருந்தும் சரியான பதில் கிடைக்கவில்லை. இதையடுத்து அந்த ரே‌ஷன் கடையில்பொருட்களும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இருந்தால் மட்டுமே ரே‌ஷன்கடையை திறப்பேன். அது தான் முறையான செயலாகும். தற்போதைய நிலையில் புதிய ரே‌ஷன் கடையை திறக்க முடியாது என்று மறுப்பு தெரிவித்து அங்கிருந்து எம்.எல்.ஏ. புறப்பட்டு சென்றார்.


Next Story