ஆரணி அரசு மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு
ஆரணி அரசு மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
ஆரணி,
ஆரணி அரசு பொது மருத்துவமனையில் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி ஆய்வு செய்தார். அப்போது மருத்துவமனையில் உள்ள கழிவறைகளையும், சிறுநீரக ரத்த சுத்திகரிப்பு (டயாலிசிஸ்) எந்திரம் வைக்கப்பட்டுள்ள அறையையும் பார்வையிட்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ஆரணி அரசு மருத்துவமனைக்கு டயாலிசிஸ் எந்திரம் வந்து நீண்ட நாட்கள் ஆனதால் அதனை உடனடியாக செயல் முறைபடுத்துவதற்காக அதற்கான உபகரணங்கள் தேவை குறித்தும் கேட்டறிய வந்தேன். ரூ.4½ கோடியில் 100 படுக்கை கொண்ட புதிய கூடுதல் கட்டிடம் கட்டும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது’ என்றார்.
ஆய்வின் போது மருத்துவ அதிகாரி டாக்டர் நந்தினி, தாசில்தார் ஆ.சுப்பிரமணி, டாக்டர் மம்தா உள்பட பலர் உடனிருந்தனர்.

Related Tags :
Next Story