சிதம்பரம் அருகே ராஜன் வாய்க்காலில் கிடந்த முதலை பிடிபட்டது
சிதம்பரம் அருகே உள்ள ராஜன் வாய்க்காலில் தேங்கி நிற்கும் தண்ணீரில் முதலை ஒன்று பிடிபட்டது.
சிதம்பரம்,
சிதம்பரம் அருகே உள்ள சிவாயம் கிராமத்தில் குமராட்சிக்கு செல்லும் சாலையில் உள்ள ராஜன் வாய்க்காலில் பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதில் வாய்க்காலில் தேங்கி நிற்கும் தண்ணீரில் முதலை ஒன்று கிடந்தது. இதை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் பார்த்து, சிதம்பரம் மாவட்ட வன அதிகாரி ராஜேந்திரனுக்கு தகவல் தெரிவித்தனர். அவரது உத்தரவின் பேரில் வனசரகர் சிதம்பரம் தலைமையில் வன காப்பாளர் கஜேந்திரன் ஆகியோர் விரைந்து சென்று அந்த பகுதி பொதுமக்கள் உதவியுடன் ராஜன் வாய்க்காலில் கிடந்த முதலையை பிடித்தனர். பிடிப்பட்ட முதலை 10 அடி நீளம் கொண்டதாகும். இதையடுத்து அந்த முதலையை சிதம்பரத்தில் உள்ள வக்காரமாரி ஏரியில் கொண்டு பத்திரமாக விட்டனர்.
Related Tags :
Next Story