பள்ளி வாகனங்களை ஓட்டிப்பார்த்து ஆய்வு செய்த கோட்டாட்சியர்
தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் பள்ளி வாகனங்களை தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் ஓட்டிப்பார்த்து ஆய்வு செய்தார்.
தாம்பரம்,
தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறப்பதற்கு முன்பு பள்ளி வாகனங்கள் முறையாக உள்ளதா? என்பதை அந்தந்த பகுதி வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மூலம் ஆய்வு செய்ய தமிழக போக்குவரத்து துறை உத்தரவிட்டு, அதன்படி ஆய்வுகள் நடைபெற்று வருகிறது.
சென்னையை அடுத்த தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலக கட்டுப்பாட்டில் தாம்பரம், வண்டலூர், படப்பை, சந்தோஷபுரம், குரோம்பேட்டை பகுதிகளைச் சேர்ந்த 46 தனியார் பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளைச்சேர்ந்த 411 பஸ் மற்றும் வேன்கள் பள்ளி மாணவ-மாணவிகளை ஏற்றிச்செல்கிறது.
இந்த 411 வாகனங்களையும் தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் சந்திரசேகரன் தலைமையில் ஆய்வு செய்யும் பணி பெருங்களத்தூரில் நடைபெற்றது. தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலர் இளங்கோவன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் செல்வி, சீனிவாஸ், ஞானவேல் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலக ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
அப்போது தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் சந்திரசேகரன், பள்ளி வாகனங்களை அவரே ஓட்டிப்பார்த்தார். அதில் உள்ள குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்த பிறகு சான்றிதழ் வழங்கும்படி வட்டார போக்குவரத்து அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
மேலும் பள்ளி வாகனங்களில் அவசர வழிகள் முறையாக செயல்படுகிறதா? என்பதை அவசர வழி கதவுகளை திறந்து பார்த்தார். வாகனங்களில் வைக்கப்பட்டிருந்த தீயணைப்பான் கருவிகள் முறையாக இயங்குகிறதா? என்பதையும், அவற்றை பயன்படுத்தும் முறை குறித்தும் அந்த வாகனத்தின் டிரைவரிடம் தீயணைப்பான் கருவியை இயக்கச்சொல்லி ஆய்வு செய்தார்.
வாகனங்களில் முதலுதவி பெட்டிகள் வைக்கப்பட்டு உள்ளதா?, அதில் காலாவதியான மருந்துகள் ஏதும் வைக்கப்பட்டு உள்ளதா? என்பதையும் கோட்டாட்சியர் சந்திரசேகரன் ஆய்வு செய்து, அனைத்தும் முறையாக இருந்தால் மட்டுமே சான்றிதழ் வழங்கவேண்டும் என்று வட்டாரபோக்குவரத்து அலுவலக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பள்ளி வாகனங்களை ஆய்வு செய்ததில் ‘சீட் பெல்ட்’ உள்பட சில குறைகளுடன் இருந்த 30-க்கும் மேற்பட்ட வாகனங்களை, உடனடியாக அந்த குறைகளை சரிசெய்யும்படி வட்டார போக்குவரத்து அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

Related Tags :
Next Story