‘என் உயிர் உள்ளவரை கர்நாடக மக்களுக்காக போராடுவேன்’ சட்டசபையில் எடியூரப்பா உருக்கமான பேச்சு
‘காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் அமைத்துள்ள கூட்டணி ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி, என் உயிர் உள்ள வரை கர்நாடக மக்களுக்காக போராடுவேன்’ என்று சட்டசபையில் எடியூரப்பா உருக்கமாக பேசினார்.
பெங்களூரு,
கர்நாடக சட்டசபை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்றனர். நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு முன்பு எடியூரப்பா உருக்கமாக பேசினார். அவர் பேசியதாவது:-
பிரதமர் மோடி மற்றும் எங்கள் கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா என்னை மாநில தலைவராக நியமித்தனர். மேலும் முதல்-மந்திரி வேட்பாளராக என்னை அறிவித்தனர். பொதுவாக எங்கள் கட்சியில் தேர்தலுக்கு முன்பு முதல்-மந்திரி வேட்பாளரை அறிவிப்பது இல்லை. ஆனால் என்னை முதல்-மந்திரி வேட்பாளராக அறிவித்தனர். நான் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை அறிந்து கொண்டேன்.
பரிவர்த்தனா யாத்திரையை நடத்தி மாநிலத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சென்றேன். இது என் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வு. நான் 6½ கோடி கர்நாடக மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். தேர்தலில் மக்கள் அன்போடு எங்களை ஆதரித்து 104 இடங்களில் வெற்றி பெற வைத்தனர். காங்கிரஸ் அரசின் தவறுகள் மற்றும் தோல்விகளால் மக்கள் பா.ஜனதாவை ஆதரித்தனர். இந்த தேர்தலில் காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகளை மக்கள் நிராகரித்துவிட்டனர்.
ஆனால் அந்த கட்சிகள் சந்தர்ப்பவாத கூட்டணியை ஏற்படுத்தி கொண்டுள்ளன. கர்நாடகத்தில் 3,700 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். விவசாயிகளின் கண்ணீரை துடைக்க காங்கிரஸ் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விவசாயிகள் நிம்மதியாக வாழ வேண்டிய நிலையை ஏற்படுத்த நான் முயற்சி செய்வேன்.
விவசாயிகளுக்கு உதவ ஏராளமான பாசன திட்டங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது. விவசாயிகளின் விளைபொருட்களுக்கு தகுந்த விலை கிடைக்க வேண்டும். அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த வேண்டும். மாநில மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீரை கொடுக்க வேண்டும். மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டியுள்ளது. என் உயிரை விவசாயிகளுக்கு அர்ப்பணிக்கிறேன்.
இந்த தேர்தலில் பா.ஜனதா அதிக இடங்களில் வெற்றி பெற்று பெரிய கட்சியாக வந்தது. அதன் அடிப்படையில் பா.ஜனதாவுக்கு ஆட்சி அமைக்க கவர்னர் வாய்ப்பு கொடுத்தார். கவர்னர் விதிமுறைகளின்படியே செயல்பட்டார். அவர் எடுத்த முடிவு தவறானது இல்லை. கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசு இருந்தபோதும், பிரதமர் மோடி பல்வேறு திட்டங்கள் மூலம் அதிக நிதியை கர்நாடகத்திற்கு ஒதுக்கினார்.
மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சி இருந்தால் இன்னும் ஏராளமான திட்டங்களை செயல்படுத்த முடியும் என்று நான் கருதினேன். கர்நாடக மக்கள் எங்களுக்கு 113 தொகுதிகளை கொடுத்து இருந்தால், மாநிலத்தின் நிலையை மாற்றிக்காட்டி இருப்போம். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 28 தொகுதிகளிலும் பா.ஜனதாவை வெற்றி பெற வைத்து மோடிக்கு பரிசாக கொடுப்போம்.
கர்நாடகத்தில் மீண்டும் தேர்தல் வந்தால் 150 தொகுதிகளில் வெற்றி பெற்று சொந்த பலத்தில் ஆட்சி அமைப்போம். காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சியினர் தங்களது எம்.எல்.ஏ.க்களை ஒரு அறையில் அடைத்து வைத்து அவர்களுக்கு தொல்லை கொடுத்தனர். அவர்களை, குடும்பத்தினருடன் பேச அனுமதிக்கவில்லை.
இது அவர்களின் முகத்தை பார்த்தாலே தெரிகிறது. ஜனநாயகத்தில் வாக்காளர்கள் தான் அதிபர்கள். எனது கை, கால் கெட்டியாக உள்ளது. நான் இன்னும் 10 ஆண்டு காலம் அரசியலில் போராடுவேன். மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்து கட்சியை பலப்படுத்துவேன். மக்களின் நம்பிக்கையை பெறுவேன். இப்போது நான் பதவியை ராஜினாமா செய்கிறேன். ஆனால் என் உயிர் உள்ள வரை கர்நாடக மக்களுக்காக போராடுவேன்.
இவ்வாறு எடியூரப்பா பேசினார்.

Related Tags :
Next Story