புதுவையில் தனியார் ஓட்டலில் ஸ்டாலினுடன், நாராயணசாமி சந்திப்பு


புதுவையில் தனியார் ஓட்டலில் ஸ்டாலினுடன், நாராயணசாமி சந்திப்பு
x
தினத்தந்தி 21 May 2018 3:45 AM IST (Updated: 21 May 2018 2:34 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் தனியார் ஓட்டலில் மு.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக முதல்-அமைச்சர் நாராயணசாமி சந்தித்தார்.

புதுச்சேரி,

புதுச்சேரி, காரைக்கால் பகுதியை சேர்ந்த தி.மு.க. நிர்வாகிகளுடன் நேற்று முன்தினம் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொண்டார். இங்கு கள ஆய்வினை முடித்துவிட்டு நாகப்பட்டினத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு சென்றார். பின்னர் நாகப்பட்டினத்தில் இருந்து நேற்று இரவு ஸ்டாலின் புதுவைக்கு வந்தார். இங்குள்ள தனியார் ஓட்டலில் இரவு தங்கினார். இதுபற்றி தகவல் அறிந்தவுடன் முதல்-அமைச்சர் நாராயணசாமி ஓட்டலுக்கு சென்று மரியாதை நிமித்தமாக மு.க.ஸ்டாலினை சந்தித்தார். அப்போது அவருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இந்த சந்திப்பு சுமார் அரைமணி நேரம் நீடித்தது.

புதுவையில் இரவில் தங்கி ஓய்வு எடுத்த ஸ்டாலின் இன்று (திங்கட்கிழமை) காலை சென்னைக்கு மு.க.ஸ்டாலின் புறப்பட்டுச் செல்கிறார்.

Next Story