அச்சல்வாடி கிராமத்தில் ஏரி தூர்வாரும் பணி கலெக்டர் தொடங்கி வைத்தார்


அச்சல்வாடி கிராமத்தில் ஏரி தூர்வாரும் பணி கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 20 May 2018 10:30 PM GMT (Updated: 20 May 2018 9:34 PM GMT)

தர்மபுரி மாவட்டம் அரூர் ஊராட்சி ஓன்றியம், அச்சல்வாடி கிராமத்தில் 6.59 எக்டர் பரப்பளவு கொண்ட புங்கன் ஏரி உள்ளது. இந்த ஏரியில் முட்செடிகள் அதிகமாக வளர்ந்து ஆக்கிரமித்துள்ளது.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் அரூர் ஊராட்சி ஓன்றியம், அச்சல்வாடி கிராமத்தில் 6.59 எக்டர் பரப்பளவு கொண்ட புங்கன் ஏரி உள்ளது. இந்த ஏரியில் முட்செடிகள் அதிகமாக வளர்ந்து ஆக்கிரமித்துள்ளது. எனவே இந்த ஏரியை தூர்வார வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை ஏற்று மாவட்ட நிர்வாகம் அந்த ஏரியை தூர்வார நடவடிக்கை மேற்கொண்டது. இந்த நிலையில் அச்சல்வாடி உள்ள புங்கன் ஏரி தூர்வாரும் பணியை கலெக்டர் மலர்விழி கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில், ஏரி தூர்வாரும் பணியினை மேற்கொள்ளும் போது அதில் கிடைக்கும் வண்டல் மண்ணை விவசாயிகள் எடுத்து சென்று பயன் பெறலாம் என்று கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் தனியார் நிறுவன இயக்குனர் ஜெயசெல்வன், பொதுப்பணித்துறை பொறியாளர் விக்னேஷ், செயற்பொறியாளர் வரதராஜ பெருமாள், வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பழகன், ஒன்றிய பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி, உதவி பொறியாளர் சக்திவேல் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.


Next Story