ஏலகிரிமலை சாலையை 2 வழிச்சாலையை மாற்ற நடவடிக்கை


ஏலகிரிமலை சாலையை 2 வழிச்சாலையை மாற்ற நடவடிக்கை
x
தினத்தந்தி 21 May 2018 4:40 AM IST (Updated: 21 May 2018 4:40 AM IST)
t-max-icont-min-icon

ஏலுகிரிமலை சாலையை 2 வழிச்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஏலகிரி கோடை விழாவில் அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார்.

ஜோலார்பேட்டை,

ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரி கோடை விழாவின் 2–ம் நாளான நிறைவு விழா நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். திட்ட அலுவலர் பெரியசாமி முன்னிலை வகித்தார். மக்கள் தொடர்பு அலுவலர் இளங்கோ வரவேற்றார்.

விழாவில் அமைச்சர் கே.சி.வீரமணி கலந்துகொண்டு, கொழு கொழு குழந்தை போட்டி, கயிறு இழுத்தல் போட்டி, கபடி, கைப்பந்து போட்டி, நடனம், நாடகம், நாய் கண்காட்சி ஆகியவற்றில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசுகையில், ஏலகிரிமலை சாலையை 2 வழிச்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்றார்.

நாய் கண்காட்சியில் வேலூர் ஸ்ரீபுரம் தங்க கோவில், மாவட்ட போலீஸ் துறை நாய்கள் சாம்பியன் பட்டத்தை வென்றது.

இதில் திருப்பத்தூர் சப்–கலெக்டர் பிரியங்கா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன், அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சு.ரவி, வட்டார மருத்துவ அலுவலர் சுமதி, வட்டார வளர்ச்சி அலுவலர் இளவரசன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ரமேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் சுகாதார துறை அலுவலர் வின்சென்ட் நன்றி கூறினார்.

நிறைவு விழாவை முன்னிட்டு, ஏராளமானோர் குடும்பம், குடும்பமாக வந்து கண்டு களித்தனர். மலை அடிவாரத்தில் இருந்து மேலே வரை வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் போக்குவரத்தை சீர் செய்யும் பணி மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Next Story