நிபா வைரஸ் தாக்குதல்: நீலகிரி எல்லை சோதனைச்சாவடிகளில் மருத்துவக்குழு நியமனம்


நிபா வைரஸ் தாக்குதல்: நீலகிரி எல்லை சோதனைச்சாவடிகளில் மருத்துவக்குழு நியமனம்
x
தினத்தந்தி 22 May 2018 4:15 AM IST (Updated: 22 May 2018 1:20 AM IST)
t-max-icont-min-icon

கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் தாக்கி உள்ளது. நீலகிரி எல்லையில் உள்ள 5 சோதனைச்சாவடிகளில் மருத்துவக்குழு நியமிக்கப்பட்டு முன் எச்சரிக்கை நட வடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஊட்டி,

கேரள மாநிலம் கோழிக்கோடு, மலப்புரம், வயநாடு பகுதிகளில் நிபா (என்ஐடிஎச்ஏ) வைரஸ் பறவைகளை தாக்கி உள்ளது. வைரஸ் தாக்கிய பறவைகள் பழங்களை கொத்தி உண்ணும்போது, நிபா வைரஸ் பழங்களுக்கு பரவுகிறது. அந்த பழங்களை பறித்து மக்களுக்கு விற்பனை செய்வதால், அதனை சாப்பிடுபவர்களுக்கு நிபா வைரஸ் தாக்குகிறது. இதனால் கோழிக்கோடு பகுதியில் 15 பேர் உயிரிழந்து உள்ளனர். கேரளா, கர்நாடகா மாநிலங்களை ஒட்டி நீலகிரி மாவட்டத்தில் தாளூர், அம்பலமூலா, அய்யன் கொல்லி, பாட்டவயல், நாடு காணி, நியூ ஹோப் பகுதி, முள்ளி, கிண்ணக்கொரை, முதுமலை புலிகள் காப்பகம் உள்ளிட்ட இடங்கள் அமைந்து உள்ளன.

நிபா வைரஸ் தாக்கிய பழங்களை குரங்குகள், அணில் போன்ற வன உயி ரினங்கள் உண்ணும் போது, அந்த வன உயிரினங்கள் மூலம் வனப்பகுதியையொட்டி வசி த்து வரும் மக்களுக்கு வைரஸ் தாக்கும் அபாயம் உள்ளது. மேலும் கேரள மாநிலத்தில் இருந்து பழங்கள் நீலகிரி மாவட்டத்திற்கு விற்பனைக்கு வருவதால், நிபா வைரஸ் பரவாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் நடவடி க்கை எடுத்து உள்ளது. இது குறித்து நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நிரு பர்களிடம் கூறியதாவது.

கேரள மாநிலத்தில் கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களில் நிபா வைரஸ் தாக்கி பலர் பாதிக்கப்பட்டு உள்ளதால், முன் எச்சரிக்கை நடவடிக்கையாக நீலகிரி மாவட்டத்தின் எல்லையில் உள்ள 5 சோதனைச் சாவடிகளில் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. கேரள மாநிலத்தில் இருந்து வரும் வாகனங்களில் நீலகிரி மாவட்டம் ஊட்டி, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு வருகிறவர் களுக்கு காய்ச்சல், தும்மல், தலைவலி போன்ற அறிகுறிகள் இருக்கிறதா என்பதை சோதனைச் சாவடிகளில் நியமிக்கப்பட்டு உள்ள மருத்துவ குழுவினர் விசாரித்த பின்னரே மாவ ட்டத்திற்குள் அனுமதிக்கப் படுகின்றனர். காய்ச்சல், இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால் அருகில் உள்ள மருத்துவ சோதனை மையத்துக்கு அனுப்பப்பட்டு, மருத்துவ பரிசோதனை செய்த பின்னர் அனுமதிக்கப்படுகிறார்கள்.

நிபா வைரஸ் பாதிப்பு இருந்தால் சம்பந்தப் பட்டவர் களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும். மேலும் கேரளாவில் இருந்து கொண்டு வரப்படும் பழங்களை வியா பாரிகள் சரிபார்த்த பின்னர் விற்பனை செய்ய வேண்டும். நீலகிரி மாவட்டத்தில் வனப் பகுதியையொட்டி உள்ள கிராமங்களில் சிறப்புமருத்துவ குழு வைரஸ் பாதிப்பு சம்பந்தமான அறிகுறிகள் இருக்கிறதா என்பது குறித்து விசாரிப்பார்கள். தும்மல், லேசான காய்ச்சல், உடல்வலி போன்றவை இருந்தால் அரு கில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகி மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.

சாப்பிடும் முன்பு கைகளை சுத்தமாக கழுவி சாப்பிட வேண்டும். தும்மல் வந்தால் சிறிய துண்டை (டவலை) வைத்து தும்ம வேண்டும். நீலகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கேரளாவுக்கு வேலைக்கு சென்று திரும்பி வந்தால், அவர்கள் மருத்துவ பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அவர்களுக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிந்தால், அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய அதிகாரிகளுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்க வேண்டும்.

மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அனைத்து பழ விற்பனை கடைகளில் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பறவைகள் கொத்தியதற்கான அடையாளங்கள் பழங்களில் காணப்பட்டால் அதனை விற்பனை செய்யக்கூடாது. கோடை சீசனையொட்டி ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தரு வதால், சுற்றுலா தலங்களில் சுகாதார அதிகாரிகள் சிறிய ஒலிபெருக்கி மூலம் விழிப் புணர்வுஏற்படுத்துகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story