வல்லண்டராமம் கிராமத்தில் காளை விடும் விழாவில் மாடுகள் முட்டியதில் 17 பேர் காயம்
வல்லண்டராமம் கிராமத்தில் நடந்த காளை விடும் விழாவில் மாடுகள் முட்டியதில் 17 பேர் காயம் அடைந்தனர்.
அணைக்கட்டு,
வல்லண்டராமம் கிராமத்தில் காளை விடும் விழா நடந்தது. இதில் கலந்துகொள்ள கொணவட்டம், ஆலங்காயம், வெள்ளகுட்டை, பரதராமி, குடியாத்தம், வாணியம்பாடி மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டு வரப்பட்டிருந்தன. காளைகளை விரட்டுவதற்கும் காளை மீது கையை போடுவதற்கும் இளைஞர்கள் திரண்டிருந்தனர். அதேபோல் காளைகள் சீறிப்பாய்ந்து ஓடுவதை பார்ப்பதற்காக பொதுமக்கள் மாடி வீடுகள் மீதும், கோவில் மதில் சுவர்கள் மீதும் நின்று வேடிக்கை பார்த்தனர்.
காளை விடும் விழா தொடங்குவதற்கு முன்பு பொய்கை கால்நடை மருத்துவர் அந்துமன், உதவி மருத்துவர்கள் காளைகளை பரிசோதித்த பிறகே போட்டியில் கலந்துகொள்ள அனுமதித்தனர். காளைவிடும் விழாவை அணைக்கட்டு தாசில்தார் குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அதைத் தொடர்ந்து காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டது. சீறிப்பாய்ந்து காளைகள் ஓடின. இளைஞர்களின் ஆரவாரத்தில் காளைகள் மிரண்டு தெருவில் அங்கும் இங்குமாக ஓடின. சில காளைகள் பாதுகாப்பு தடுப்பு கம்புகளை தாண்டி வேடிக்கை பார்த்து கொண்டிருந்த வாலிபர்களை முட்டி தள்ளியது.
இதில் 17-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். அவர்களுக்கு பொய்கை ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் வினோத், பார்த்திபன் தலைமையிலான மருத்துவ குழுவினர் முதல் உதவி சிகிச்சை அளித்தனர். இதில் 4 பேர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சீறிப்பாய்ந்து ஓடிய காளைகள் தடுப்பு கம்புகளை உடைத்து கொண்டு சென்றதில் 2 காளைகளுக்கு படுகாயம் ஏற்பட்டது. கால்நடை மருத்துவர்கள் அந்த காளைகளுக்கு சிகிச்சை அளித்தனர். வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
அணைக்கட்டு வருவாய் ஆய்வாளர் ஜெயந்தி, கிராம நிர்வாக அலுவலர் பிரபு மற்றும் கிராம உதவியாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
பள்ளிகொண்டா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி, வேப்பங்குப்பம், அணைக்கட்டு சப் -இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஏற்பாடுகளை வல்லண்டராமம் கிராமத்தை சேர்ந்த இளைஞர் நற்பணி மன்றத்தினரும், ஊர் பொது மக்களும் செய்திருந்தனர்.

Related Tags :
Next Story