மனைவியை கண்டுபிடித்து தாருங்கள் கலெக்டரிடம் கண்பார்வை இல்லாதவர் கண்ணீர் கோரிக்கை
காணாமல் போன மனைவியை தேடி கண்டுபிடித்து தாருங்கள் என்று கண்பார்வை இல்லாத கணவன் கண்ணீர் மல்க கலெக்டரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அதிகாரி முத்துமாரி முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகள் குறித்து மனுக்கள் அளித்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள மேலாய்க்குடி திருச்சண்முகநாதபுரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- எங்கள் ஊரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். ஆனால், எங்கள் பகுதிக்கு மினி பஸ்கள் வருவதில்லை. அரசு பஸ்கள் நாங்கள் மனு கொடுத்த அடுத்த நாள் மட்டும் வருகிறது. அதன்பின்னர் வருவதில்லை.
இதனால் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வந்து செல்வதிலும், கிராம மக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு செல்வதற்கும் வழியில்லாமல் போகிறது. சாலை வசதி சரியில்லை என்று காரணம் தெரிவித்தனர். தற்போது தரமான சாலை போடப்பட்ட பின்னரும் பஸ்கள் இயக்கப்படுவதில்லை. எனவே, எங்கள் பகுதிக்கு மினி பஸ் மற்றும் அரசு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.
திருவாடானை அருகே உள்ள நம்புதாளை மீனவர் காலனி படையாச்சி தெருவை சேர்ந்தவர் பெரியசாமி மகன் காளியப்பன். கண் பார்வை இல்லாத இவர் தனது மகள் சுகன்யாவுடன் வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- நான் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் சிவகங்கை மாவட்டம் மாலக்கோட்டை பகுதியை சேர்ந்த தமிழரசி என்ற பெண்ணை திருமணம் செய்தேன். கண் பார்வை இல்லாத நிலையில் ஊதுவத்தி விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வந்தோம். எனது மனைவி குடும்பத்தையும், குழந்தையையும் கவனித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் நான் வியாபாரத்திற்கு சென்றுவிட்டேன். எனது மகள் பள்ளிக்கு சென்றுவிட்டார்.
வீட்டில் எனது மனைவி மட்டும் தனியாக இருந்தார். நான் வியாபாரம் முடித்துவிட்டு திரும்பி வந்தபோது மனைவியை காணவில்லை. எங்கு சென்றார், என்ன ஆனார் என்று தெரியவில்லை. கண்பார்வையில்லாத நிலையில் எனது மகளுடன் என்ன செய்வது என தெரியாமல் தவித்து வருகிறேன். எனது மனைவியை தேடி கண்டுபிடித்து தர வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது. இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

Related Tags :
Next Story