சித்தப்பா வீட்டுக்கு வந்த சிறுவன் கழிவு நீர் தொட்டியில் விழுந்து சாவு


சித்தப்பா வீட்டுக்கு வந்த சிறுவன் கழிவு நீர் தொட்டியில் விழுந்து சாவு
x
தினத்தந்தி 22 May 2018 4:50 AM IST (Updated: 22 May 2018 4:50 AM IST)
t-max-icont-min-icon

கோடை விடுமுறைக்கு சித்தப்பா வீட்டுக்கு வந்திருந்த 8 வயது சிறுவன் கழிவு நீர் தொட்டியில் விழுந்து பரிதாபமாக இறந்து போனான். ராஜபாளையம் அருகே நடந்துள்ள இந்த சோக சம்பவம் பற்றிய விவரம் வருமாறு.

ராஜபாளையம்,

நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் சுப்பிரமணியாபுரத்தை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. விவசாயி. இவரது மகன் அரவிந்த் (வயது8). அந்தப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான். வெள்ளைச்சாமியின் தம்பி பாக்யராஜ் ராஜபாளையம் அருகே மீனாட்சிபுரம் மாங்குடி பகுதியில் வசித்து வருகிறார்.

கோடை விடுமுறையையொட்டி சிறுவன் அரவிந்த் சித்தப்பா வீட்டுக்கு வந்திருந்தான். நேற்று முன்தினம் சித்தப்பாவின் குழந்தைகளுடன் வீட்டுக்கு வெளியே அரவிந்த் விளையாடிக்கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் பாக்யராஜின் குழந்தைகள் வீடு திரும்பி விட்டனர். ஆனால் அரவிந்த் வீட்டுக்கு வரவில்லை.

சிறுவனை காணாமல் பதறியடித்து பல இடங்களில் தேடினர். அப்போது பாக்யராஜின் வீட்டு அருகே புதிதாக கட்டிவரும் வீட்டில் அமைக்கப்பட்டிருந்த கழிவு நீர் தொட்டியில் அவன் இறந்து கிடப்பது தெரியவந்தது. விளையாடியபோது கழிவுநீர் தொட்டியில் தேங்கியிருந்த தண்ணீரில் தவறி விழுந்து அவன் உயிர் இழந்திருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து தளவாய்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் விசாரணை மேற்கொண்டார்.

Next Story