காங்கிரஸ் இல்லா இந்தியாவை உருவாக்க பா.ஜனதா எடுத்த முயற்சி சரியல்ல: சிவசேனா கருத்து
காங்கிரஸ் இல்லா இந்தியாவை உருவாக்க பா.ஜனதா எடுத்த முயற்சி சரியல்ல என சிவசேனா கருத்து தெரிவித்துள்ளது.
மும்பை,
கர்நாடக மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா கட்சி 104 இடங்களை கைப்பற்றி முன்னிலை பெற்றது. ஆனால் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க உள்ளன. முன்னதாக பா.ஜனதாவை சேர்ந்த எடியூரப்பாவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்து பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் கால அவகாசம் கொடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழான ‘சாம்னா’வில் கூறியிருப்பதாவது:-
கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி அமைக்க முடியாதது வருத்தம் அளிப்பதாக உள்ளது. ஆனால் அவர்கள் ஆட்சியை கைப்பற்ற செய்த முயற்சி மிகவும் தவறானது. காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்க இது சரியான வழி அல்ல. இது போன்ற நடவடிக்கைகளால் ஜனநாயகம் மேலும் பலவீனப்படவே செய்யும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தது.
மராட்டியத்தில் ஆளும் பா.ஜனதா தலைமையிலான கூட்டணியில் சிவசேனா இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story