இதய நோயை ஏற்படுத்தும் குடல் நுண்ணுயிரிகள்!
நம் உடல்தானே அதைப்பற்றி முழுதாக நமக்குத் தெரியாதா என்ன? என்று யாரும் சொல்லிவிட முடியாது.
செயற்கை நுண்ணறிவு கருவிகள் வரை மிகவும் சக்திவாய்ந்த தொழில்நுட்பங்கள் பலவற்றை கண்டுபிடித்துவிட்டாலும் கூட, மனிதனால் இன்னும் மனித உடலையும், மனித உடல் பாகங்களின் செயல்பாடுகளையும், அவற்றை பாதிக்கும் எண்ணற்ற நோய்களையும் முழுமையாக புரிந்துணர முடியவில்லை என்பதே உண்மை.
உதாரணமாக, புற்றுநோய் போன்ற நோய்கள் மீதான ஆய்வு கள் கடந்த பல நூற்றாண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் கூட, பல்வேறு புற்றுநோய்களுக்கான குறிப்பிட்ட காரணங்களும், சில புற்றுநோய்களை முற்றிலும் குணப்படுத்தும் மருந்துகள் அல்லது சிகிச்சைகளும்தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால், மீதமுள்ள புற்றுநோய்களை குணப்படுத்தும் சிகிச்சைகளை மனிதனால் இன்னும் கண்டறிய முடியவில்லை.
ஏனென்றால், தற்போதைய நம் தொழில்நுட்பங்களால் கண்டறிய முடியாத பல உயிரியல் மர்மங்கள் புற்றுநோய்களில் உள்ளன. அதுபோலவே மனிதர்களின் இதய நோய் தொடர்பாக இதுவரை இருந்துவந்த ஒரு உயிரியல் சிக்கலுக்கு இங்கிலாந்தில் உள்ள நாட்டிங்காம் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்களால் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய ஆய்வு ஒன்றின் மூலமாகத் தற்போது தீர்வு கிடைத்துள்ளது.
இன்றைய தகவல் யுகத்தில், இதய நோய் ஏற்படுவதற்கான காரணங்கள் என்னவென்று கேட்டால், உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் அதிக கொழுப்பு மற்றும் புகைப்பிடித்தல் என்று அதிக படிப்பறிவில்லாத பாமரர்களும் கூட பளிச்சென்று சொல்லிவிடுவார்கள்.
ஆனால், இம்மூன்று காரணங்களை வைத்துக்கொண்டு இளம் வயதினர், பெண்கள் மற்றும் உலகின் குறிப்பிட்ட சில இன மக்கள் ஆகியோருக்கு எதிர்காலத்தில் இதய நோய் ஏற்படுமா என்று திட்டவட்டமாக கூற முடியாது என்கிறார்கள் மருத்துவர்கள்.
மோசமான குடல் நுண்ணுயிரிக் கலவைதான் இளம் வயதினர், பெண்கள் மற்றும் குறிப்பிட்ட சில இன மக்களுக்கு எதிர்காலத்தில் இதய நோய் ஏற்படும் என்பதை திட்டவட்டமாகக் கூற உதவும் காரணியாக இருக்கக்கூடும் என்கிறது சமீபத்தில் வெளியான ஆய்வறிக்கை ஒன்று.
எதிர்காலத்தில் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படுமா என்பதைக் கண்டறிய, தமனிகளின் மென்மைத் தன்மை அல்லது உறுதியான தன்மையை அளவிடுவதே தற்போதைய மருத்துவ உத்தியாக இருக்கிறது. தமனிகளின் இறுக்கம் (arterial stiffness) என்று அழைக்கப்படும் இந்த உத்தியானது, மாரடைப்புக்கான காரணிகளான அதிக கொழுப்பு அல்லது புகைப்பழக்கத்துடன் தொடர்புடையதாக இல்லை. மாறாக, திசுக்காயம் எனும் உயிரியல் நிகழ்வுடன் நெருங்கிய தொடர்புடையதாக இருக்கிறது.
திசுக்காயம் என்பது உடலுக்கு ஏற்படக்கூடிய காயங்களுக்கு எதிராக நிகழும் ஒரு உயிரியல் நிகழ்வு. ஆனால் அதே திசுக்காயம் அளவுக்கு அதிகமாக நிகழ்ந்தால், அதுவே மூட்டுவீக்கம் (கீல்வாதம்) மற்றும் படை நோய் என்று கூறப்படும் ஆர்த்தரைட்டிஸ் மற்றும் எக்சீமா (arthritis and eczema) ஆகிய நோய்களை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
மிகவும் முக்கியமாக, ஒருவருக்கு எவ்வளவுக்கு அதிகமாக திசுக் காயம் நிகழ்கிறதோ அவருக்கு இதய நோய் ஏற்படும் ஆபத்து அவ்வளவு அதிகம் என்றும், இதய நோய் மற்றும் தமனி இறுக்கம் ஆகியவை ஏற்படுவதற்கு திசுக்காயம் என்பது ஒரு முக்கிய காரணம் என்றும் சமீபத்திய பல மருத்துவ ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.
திசுக்காயத்தை குறைக்கும் மருந்து எடுத்துக்கொண்ட, ஒரு முறை மாரடைப்பு தாக்கிய நோயாளிகளுக்கு அதன்பிறகு ஏற்படக்கூடிய மாரடைப்புகளின் எண்ணிக்கை மற்றும் புற்றுநோய் ஏற்படும் ஆபத்து ஆகியவை வெகுவாகக் குறைந்தது என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டது.
ஆனால், திசுக்காயத்தை குறைக்க மருந்துகள் எடுத்துக்கொள்ளாமல் வேறு என்ன செய்யலாம் என்று ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டபோது, உடல் பருமன் மற்றும் புகைப்பிடித்தலை குறைப்பது சிறந்த முயற்சி என்று தெரியவந்தது.
ஆனால், திசுக்காயத்தால் ஏற்படக்கூடிய நீரிழிவு உள்ளிட்ட நோய்கள் ஏற்படாமல் தடுக்க வேண்டுமானால் நம் குடலில் உள்ள நுண்ணியிரிகள் காரணமாக உள்ளன என்றும் இதற்கு முன்னர் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் மாரடைப்புக்கு காரணமான, தமனி இறுக்கத்துக்கு குடல் நுண்ணியிரி எண்ணிக்கையும், அவை உற்பத்தி செய்யும் சில ரசாயனங்களின் அளவும் குறைவாக இருப்பதும் காரணம் என்றும் ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டது.
ஆக மொத்தத்தில், மேற்குறிப்பிட்ட பல ஆய்வு முடிவுகளின் அடிப்படையில், ஒமேகா 3 அதிகம் உள்ள மீன்கள் மற்றும் நார்ச்சத்து அதிகமுள்ள பழங்கள் மற்றும் காய்கறிகள் நிறைந்த உணவுகளை உட்கொள்வதன் மூலமாக நல்ல குடல் நுண்ணுயிரிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி மாரடைப்பு ஏற்படுவதை தடுப்பதே இயற்கையான மற்றும் சிறந்த வழி என்று உறுதி செய்துள்ளது இந்த புதிய ஆய்வு.

Related Tags :
Next Story