அடுத்தடுத்து 2 ஓட்டல்களில் கியாஸ் அடுப்பின் பர்னர்கள் திருட்டு


அடுத்தடுத்து 2 ஓட்டல்களில் கியாஸ் அடுப்பின் பர்னர்கள் திருட்டு
x
தினத்தந்தி 23 May 2018 4:15 AM IST (Updated: 23 May 2018 12:28 AM IST)
t-max-icont-min-icon

பூந்தமல்லியை அடுத்த கரையான்சாவடியில், முகமது குட்டி (வயது 48) என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார். இரவில் ஓட்டல் மூடப்பட்டாலும், கியாஸ் அடுப்புகள் ஓட்டலுக்கு வெளியே இருப்பது வழக்கம்.

பூந்தமல்லி,

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முகமது குட்டி வழக்கம் போல் ஓட்டலை மூடி விட்டு சென்றார். நேற்று காலை ஓட்டலை திறக்க ஊழியர்கள் வந்தபோது கியாஸ் அடுப்புகளில் இருந்த பித்தளை பர்னர்கள் திருடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் அவர்கள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில், நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் ஓட்டலுக்கு வெளியே இருந்த 3 கியாஸ் அடுப்புகளில் இருந்தும் பித்தளை பர்னர்களை கழற்றி, அவற்றை ஒரு பையில் போட்டு எடுத்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன. மேலும், அவர் அருகில் உள்ள மற்றொரு ஓட்டலுக்கு வெளியே இருந்த கியாஸ் அடுப்பில் இருந்தும் பித்தளை பர்னர்களை கழற்றி திருடி சென்ற காட்சிகளும் பதிவாகி இருந்தன.

இது தொடர்பான புகாரின் பேரில் வழக்குபதிவு செய்து உள்ள பூந்தமல்லி போலீசார் கண்காணிப்பு கேமராவில் பதிவான மர்ம நபரின் உருவத்தை வைத்து விசாரித்து வருகின்றனர்.

Next Story