ஸ்ரீவைகுண்டம் அருகே கல்குவாரி தண்ணீரில் மூழ்கி சிறுவன் பலி


ஸ்ரீவைகுண்டம் அருகே கல்குவாரி தண்ணீரில் மூழ்கி சிறுவன் பலி
x
தினத்தந்தி 23 May 2018 3:13 AM IST (Updated: 23 May 2018 3:13 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவைகுண்டம் அருகே கல்குவாரி தண்ணீரில் மூழ்கி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

ஸ்ரீவைகுண்டம், 

ஸ்ரீவைகுண்டம் அருகே கல்குவாரி தண்ணீரில் மூழ்கி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

சமையல் தொழிலாளி

கோவை மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்தவர் வீரன். இவர் சமையல் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ஜெயபூபதி. இவர்களுடைய மகன் சூரியா (வயது 8). இவன் அங்குள்ள பள்ளிக்கூடத்தில் 3–ம் வகுப்பு படித்து வந்தான். வீரன் தன்னுடைய மாமனாரின் ஊரான தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகே நாட்டார்குளத்தில் நடந்த கிறிஸ்தவ ஆலய திருவிழாவுக்கு தன்னுடைய குடும்பத்தினருடன் வந்தார்.

நேற்று முன்தினம் மாலையில் நாட்டார்குளம் மாயநேரி குளத்து கரை பகுதியில் உள்ள கல்குவாரி தண்ணீரில் ஜெயபூபதியின் தாயார் அன்னசெல்வம் தன்னுடைய பேரன் சூரியாவுடன் குளிக்க சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக சூரியா கல்குவாரி தண்ணீரில் மூழ்கினான். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அன்னசெல்வம் கூச்சலிட்டார்.

உடல் மீட்பு

உடனே அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று, கல்குவாரி தண்ணீரில் மூழ்கிய சூரியாவை தேடினர். ஆனால் அவனை மீட்க முடியவில்லை. சூரியா கல்குவாரி தண்ணீரில் மூழ்கி இறந்தான். இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று, கல்குவாரியில் இருந்து சூரியாவின் உடலை இரவில் மீட்டனர். செய்துங்கநல்லூர் போலீசார், சூரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த சூரியாவின் உடலைப் பார்த்து பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.


Related Tags :
Next Story